75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் | அசிங்கப்பட்ட கேப்ரில்லா, கலாய்த்து தள்ளிய அரவிஷ்! | சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ராதிகா ப்ரீத்தி! மகிழ்ச்சியில் ரசிகர்கள் | பாலிவுட்டை மாற்றிவிட்டதா 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப்' | நயன்தாராவை காப்பியடித்த ஆர்த்தி கணேஷ்! விக்னேஷ் சிவனின் கமெண்ட் | மோகன்லாலின் திரிஷ்யம்-3 விரைவில்! | கணவரின் மரணம் எதிரொலி: உடல் உறுப்பை தானம் செய்வதாக அறிவித்த மீனா! | கண்ணன் என் காதலன், சின்னக்கவுண்டர், வீட்ல விசேஷம் - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா நடிக்கும் படம் அன்புள்ள கில்லி. பாலசுப்பிரமணியம், ஒளிப்பதிவு செய்ய, அரோல் குரோலி இசை அமைக்கிறார். இந்தப் படம் நாய்க்கும், மனிதனுக்குமான உறவை சொல்லும் படம். இதில் லாபர்டா வகை நாய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. அந்த நாயின் பெயர்தான் கில்லி.
படத்தின் ஹீரோ மைத்ரேயா விஜய் ரசிகராக நடிதுள்ளார். அத்துடன் சினிமாவில் நடித்து புகழ்பெற்ற நாய்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளன. நாயின் பார்வையில் கதை நகரும், நாயே கதையை சொல்லும், தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.
படம் பற்றி இயக்குனர் ராமலிங்கம் ஸ்ரீநாத் கூறியதாவது: அன்புள்ள கில்லி படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரின் சுய வாழ்வும் ஒரு வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது. ஏனெனில் அனைவருமே செல்லப்பிராணி வளர்ப்பவர்கள். ஒரு வகையில் அவர்களின் வாழ்வுதான் இந்தக்கதை. நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக இருக்கும். முக்கியமாக அனைவரும் குடும்பத்துடன் தியேட்டரில் ரசித்து பார்க்கும் படமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை கொண்டாடுவார்கள்.
இதுவரை உருவாகியிருக்கும் மனிதன், நாய் உறவு சம்பந்தமான கதைகளிலிருந்து மாறுபட்டு தனிச்சிறப்பான அம்சத்தை கொண்டிருக்கும். மேலும் நாயின் மனகுரலில் கதை நகருவதாய் வெளிவரும் முதல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.