பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
மீடியம் பட்ஜெட் படங்களின் ஆஸ்தான நாயகனாக இருந்த விமலுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் மன்னர் வகையறா என்ற படத்தை தானே தயாரித்தார். இதனை பூபதி பாண்டியன் இயக்கினார். இந்த படத்தை வெளியிட முடியாமல் அவர் தவித்தபோது வெளியிடும் பொறுப்பை அரசு பிலிம்ஸ் ஏற்றுக் கொண்டது.
இதற்கான செலவினங்களை விமல் அடுத்து நடிக்கக்கூடிய ஒவ்வொரு படத்திற்கும் வாங்க கூடிய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை தவணை முறையில் கொடுப்பதாக கொடுத்த உத்தரவாதத்தை அரசு பிலிம்ஸ் ஏற்றுக் கொண்டது. தற்போது ஒப்பந்தப்படி விமல் நடந்து கொள்ளவில்லை என்று அரசு பிலிம்ஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக அரசு பிலிம்ஸ் உரிமையாளர் பி.கோபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
விமல் தயாரித்த மன்னர் வகையறா படத்திற்கு அவர் கேட்டு கொண்டதால் ரூ.5 கோடியே 35 லட்சம் கடனாக கொடுத்தேன். படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரு கோடியே 35 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு, மீதி தொகையை திரைப்படத்தில் நடித்து, அதில் கிடைக்கும் சம்பளத்தின் மூலம் திருப்பித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.
ஆனால் மன்னர் வகையறா படத்திற்கு பிறகு 7 படங்களில் நடித்துவிட்டு எந்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுதொடர்பான நீதிமன்ற தீர்ப்பின்படி என்னுடைய அனுமதி இல்லாமல் விமலின் எந்த படத்தையும் வெளியிட முடியாது என்பதால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளவர்களும் என்னை அணுகி ஆலோசனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.