Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுருள் வளையத்திற்குள், 'த்ரில்லர்!'

28 பிப், 2020 - 14:56 IST
எழுத்தின் அளவு:
Saw---Thriller-movie

கொடூரமான கொலைகள் நடக்கும் கதைகளம் தான், ஷா படத்தின் அடி நாதம். இதற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த, 2003ல், ஜேம்ஸ் வேன் எழுதி, இயக்கிய குறும்படம், ஷா. இதற்கு கிடைத்த வரவேற்பால், அடுத்த ஆண்டே, அவரின் இயக்கத்தில், 'லயன்ஸ் கேட்' நிறுவனத்தின் தயாரிப்பில், ஷா படம் வெளியானது. அதிரிபுதிரி ஹிட். பிறகென்ன, ஆண்டு மலர் போல, 2004 முதல், 2010 வரை, ஒவ்வொரு அக்டோபரிலும், ஷா படத்தின் வரிசை வெளியானது.

கடந்த, 2010ல் வெளியான, ஷா 3டி படம், வெற்றி பெறவில்லை. உடனே, 'இனி ஷா படங்கள் வராது' என, 'லயன்ஸ் கேட்' கோபமாக அறிவித்தது. ஆனால், ஷா பட வரிசைகளால், பெரும் வசூல் ஈட்டிய நிறுவனம், ஏழு ஆண்டுகளுக்கு பின், தன் முடிவை மாற்றிக் கொண்டது. ஆம்... 2017ல், ஜிக் ஷா வெளியானது. இது, வெற்றி பெற்றது. காமெடி நடிகர் கிறிஸ் ராக் என்பவருக்கு, ஷா படங்கள் பிடிக்கும். 'ஷா படத்தை மையமாக வைத்து, நான் ஒரு கதை எழுதியிருக்கேன்' என, ஒரு திருமண விழாவில், 'லயன்ஸ் கேட்' நிறுவனத்திடம், கிறிஸ் ராக் கூறியுள்ளார். கதை சிறப்பாக இருக்கவே, சில நிபந்தனைகளுடன், அக்கதையை படமாக்க, தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது.

ஷாவின் எட்டு பாகங்களுக்கும் திரைக்கதை எழுதிய, ஜோஷ் ஸ்டோல்பெர்க், பீட்டர் கோல்ட் பிங்கர் ஆகியோர் தான், இந்த படத்திலும் பணிபுரிகின்றனர். 2, 3, 4 பாகங்களை இயக்கிய டெரன் லின் போஸ்மென், 9வது பாகத்தையும் இயக்குகிறார். இதில், கிறிஸ் ராக், சாமுவேல் எல்.ஜாக்சன், மேக்ஸ் மிங்க கெல்லா ஆகி-யோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு, ஆர்கன் டோனர் என, முதலில் பெயர் வைத்தனர்; பின், ஸ்பைரல்: பிரம் தி புக் ஆப் ஷா என, மாற்றப்பட்டது.

ஸ்பைரல் என்ற சுருள்வளையம் தான், இப்படத்தில் வில்லனுக்கான, 'சிம்பல்!' இப்படத்தில், மனிதர்களை கொடுமைப்படுத்தும் காட்சிகள் இருக்காது; அதேநேரம், த்ரில்லருக்கு குறைவிருக்காது என, படக்குழு தெரிவித்துள்ளது. மே, 15ம் தேதி படம் வெளியாகிறது; இப்படம் வெற்றி பெற்றால், தொடர்ந்து, ஸ்பைரல் பாகங்கள் வெளிவரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நாடக காதலை வெளிச்சம் போட்டு காட்டும் ‛திரெளபதிநாடக காதலை வெளிச்சம் போட்டு ... சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

28 பிப், 2020 - 20:18 Report Abuse
KARTHIK N ஷா அல்ல ஸா. தமிழைத்தான் கொலை செய்வீர்கள். இப்போது ஆங்கிலத்தையும் கொலை செய்கிறீர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in