3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! |
ஒரே ஒரு டிரைலர் வெளியாகி ரிலீஸிற்கு முன்பே சர்ச்சைகளை சந்தித்த படம் ‛திரெளபதி. ஆணவக் கொலைகள் என்பது தமிழ்நாட்டில் அடிக்கடி செய்திகளில் அடிபடும் ஒரு விஷயமாக இருக்கிறது. அந்த ஆணவக் கொலைகள் வேறு ஒரு சதித் திட்டத்தாலும் நடக்கிறது என்ற ஒரு புதிய சம்பவத்தை இந்தப் படத்தில் கதையாக வைத்திருக்கிறார் இயக்குனர் மோகன். அவர் சொல்ல வந்த விஷயத்தை இன்னும் விறுவிறுப்பாகச் சொல்லியிருந்தால் இந்த திரௌபதியின் சபதம் முழுமையாக வென்றிருக்கும். இருப்பினும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே அதிகாலையில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு வந்த நிலையில் இந்தப்படத்திற்கும் சிறப்பு காட்சி நடந்துள்ளது. நாடக காதலால் பெண்கள் ஏமாற்றப்பட்டு, அந்த குடும்பம் எப்படி சீரழிகிறது என்று இப்படம் பேசுவதால் தென் தமிழகத்தை தவிர்த்து மற்ற ஊர்களில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் இப்படத்தை அரசியல் தலைவர்களான பா.ஜ.வின் ஹெச்.ராஜா, பா.ம.க.வின் ராமதாஸ் போன்றோர் பார்வையிட்டு தங்களது ஆதரவையும் தெரிவித்துள்ளனர். இதுவும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.