ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் | பிடித்தமான பாடலுக்கு நடனமாடுவது ரொம்ப பிடிக்கும் - தமன்னா | மகன்களுடன் முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் | கவனம் ஈர்க்கும் 'தூமம்' டிரைய்லர் | பகவந்த் கேசரி பராக்: பாலய்யாவின் அடுத்த அதிரடி | விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்க்க திரளும் மலேசிய மக்கள்: படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் | ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா? | பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை |
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ராவ். இவருடைய வீடு, சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கிறது. இவர், கடந்த 9ல் டொமினோஸ் பிட்சா நிறுவனத்துக்கு போன் செய்து, தனக்கு தேவையானவைகளை ஹோம் டெலிவரி செய்ய ஆர்டர் கொடுத்தார். அதையடுத்து, பரமேஸ்வரன் என்பவர், டொமினோஸ் பிட்சா நிறுவனத்தின் தின்பண்டங்களை எடுத்துக்கொண்டு டெலிவரிக்காக வீட்டுக்கு வருவதாகக் கூறி, வீட்டு முகவரியைக் கேட்டிருக்கிறார். முகவரியை மீண்டும் மீண்டும் கேட்க, காயத்ரி ராவ் கோபமாகி திட்டி இருக்கிறார். ஒரு கட்டத்தில், ஆர்டர் செய்ததை கேன்சல் செய்யப் போவதாக பரமேஸ்வரனிடம் கூறியிருக்கிறார்.
இதனால், கோபம் அடைந்த பரமேஸ்வரன், காயத்ரியிடம் கோபமாகவும், தவறாகவும் பேசியிருக்கிறார். பின், வீட்டை கண்டுபிடித்து வந்து, பிசாவை டெலிவரி செய்திருக்கிறார். அப்போதும், தவறாகப் பேசியிருக்கிறார். இதனால், கோபம் அடைந்த காயத்ரி, பிட்சா நிறுவனத்தை மீண்டும் தொடர்பு கொண்டு, பரமேஸ்வரன் நடவடிக்கைகள் குறித்து புகார் செய்திருக்கிறார். இதனால், பரமேஸ்வரனை பிட்சா நிறுவனம் வேலையில் இருந்து நீக்கி விட்டது.
இதனால் கோபம் அடைந்த பரமேஸ்வரன், காயத்ரியை பழிவாங்க நினைத்து, அவருடைய செல்போன் என்னை, வாட்ஸ் - ஆப் குரூப்களில் ஐட்டம் என குறிப்பிட்டு பகிர்ந்தார். இதையடுத்து, சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ், மகேஸ்வரன் ஆகியோர், காயத்ரியை தொடர்பு கொண்டு, தாறுமாறாக பேசி இருக்கின்றனர். ஆபாசமாகவும் பேசியுள்ளனர்.
அதுவரை இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என புரியாமல் இருந்த காயத்ரி, சென்னை, தேனாம்பேட்டை, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ், மகேஸ்வரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில்தான், பரமேஸ்வரனின் திருவிளையாடல்கள் வெளியானது. காயத்ரியின் செல்போன் என்னை பதிவிட்டு, கூடவே, ஐட்டம் எண் என்றும் பதிவிட்டு, வாட்ஸ்-ஆப் மூலம் தகவலாக பரவச் செய்திருக்கிறார் பரமேஸ்வரன். இதையடுத்து, பரமேஸ்வரனை பிடித்து வந்து போலீசார் விசாரித்தனர்.