'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளான சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில் அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர், இந்த வழக்கில் தனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக கொச்சி கலூரில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்தார். இந்த வழக்கில் முக்கியமான சாட்சியாக மஞ்சு வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 11 மணிக்கு மேல் தொடங்கிய விசாரணையில் மஞ்சுவாரியர் மட்டுமல்லாது நடிகர் சித்திக், நடிகை பிந்து பணிக்கர் ஆகியோரும் தங்களது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார்கள்.
வரும் நாட்களில் நடிகைகள் கீது மோகன்தாஸ், சம்யுக்த வர்மா மற்றும் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் தங்களது விளக்கத்தை பதிவு செய்ய உள்ளார்கள்.. கிட்டத்தட்ட 650 பக்கங்கள் சார்ஜ் ஷீட் அடங்கிய இந்த வழக்கில் 14 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 385 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 50 பேர் திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.