Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தபுவை விலக்கிய அந்தாதுன் தெலுங்கு ரீமேக் படக்குழு

27 பிப், 2020 - 17:46 IST
எழுத்தின் அளவு:
Andhadhun-Telugu-Remake-:-Tabu-out

இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தமிழில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருக்கிறார். இந்தநிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நிதின் நடிக்க இந்த படத்தை மேர்லபகா காந்தி இயக்கவுள்ளார்.

இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் மீண்டும் அவரையே ஒப்பந்தம் செய்ய சென்ற தயாரிப்பாளரிடம் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்துள்ளார் தபு. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ஒரு சீனியர் நடிகைக்கு இந்த சம்பளம் ரொம்பவே அதிகம் எனக் கருதியதால் அவருக்கு பதிலாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அனசுயா பரத்வாஜ் என்கிற நடிகையை 10 லட்சம் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'அல வைகுண்டபுரம்லோ' என்கிற படத்தின் மூலம் தெலுங்கில் ரீ என்ட்ரி கொடுத்து இருந்த தபு, அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தி விட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தடம் இந்தி ரீமேக்கில் சித்தார்த் மல்ஹோத்ராதடம் இந்தி ரீமேக்கில் சித்தார்த் ... கவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் இருக்கு! கவர்ச்சி மட்டுமல்ல; நடிப்பும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
28 பிப், 2020 - 05:18 Report Abuse
meenakshisundaram தபு தேவை இல்லாதான் ,முற்றிய தோற்றம் வந்து ரொம்ப நாளாச்சு இளம் நடிகர்களே தேவலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in