சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‛இந்தியன் 2 படப்பிடிப்பு, சென்னையை அடுத்துள்ள தனியார் பிலிம்சிட்டியில் நடந்தது. கடந்தவாரம் இங்கு நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து லைகா நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார் கமல்ஹாசன். அதில் படத்தில் நாயகன் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பில் விபத்து நடந்தால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் கமலுக்கு லைகா நிறுவனம் பதில் கொடுத்துள்ளது. அதன் விபரம் வருமாறு : உங்களின்(கமல்) கடிதம் கிடைக்கப் பெற்றோம். பிப்., 19 சம்பவத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இறந்தவர்களின் உடலுக்கு நீங்கள் அஞ்சலி செலுத்திவிட்டு வந்த 15 நிமிடத்தில் லைகாவின் சுபாஸ்கரன் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தோம். அவர்களின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தங்களின் கடிதம் கிடைத்த 22-ம் தேதிக்கு முன்பாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தோம். இது உங்களின் கவனத்திற்கு வராதது துரதிர்ஷ்டமானது.
லைகா நிறுவனம் உலகதரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட நிறுவனம். இந்த விபத்து எதிர்பாராமல் நடந்தது. இதில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் பொறுப்பு உள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்த கலைஞர்களான நீங்களும், ஷங்கரும் தான் படப்பிடிப்பு தளத்தில் கேப்டன் ஆப் தி ஷிப்பாக இருந்தீர்கள். பாதுகாப்பு விஷயத்தில் எந்த பிரச்னையும் ஏற்பாடாது என நாங்கள் நம்பினோம். முழு படப்பிடிப்பும் உங்கள் இருவரது கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதை நினைவூட்ட கடினமாக உள்ளது.
இவ்வளவு பணம் போட்டு படம் எடுக்கும் நாங்கள், பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தில் அக்கறை கொள்வோம் என நீங்கள் நம்புவீர்கள் என எதிர்பார்த்தோம். பாதுகாப்பு விஷயத்தில் எதையும் விட்டுத்தர மாட்டோம். இதற்காக எங்களது நிறுனவனத்தின் சார்பில் சுந்தர்ராஜன், மணிகண்டன் என்ற விமலை இருவரை நியமித்துள்ளோம். படப்பிடிப்பு தளத்தில் உரிய பாதுகாப்பு அளிக்கும் விதமாக அனைத்து ஊழியர்கள், கலைஞர்களுக்கும் தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளோம்.