Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குறிப்பிட்ட சாதி அடையாளப் படமாக வரும் 'திரௌபதி' ?

27 பிப், 2020 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Draupathi-movie-releasing-tomorrow

தமிழ் சினிமாவில் 90களில் தான் அதிகமான சாதிப் பின்னணி கொண்ட படங்கள் வெளிவந்தன. அந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் சினிமாவில் இயக்குனர்களாக இருந்ததால் அப்படிப்பட்ட சாதிப் படங்களைக் கொடுத்தார்கள். ஆனாலும், அந்த சாதிப் படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு ஊரின் கலாச்சாரப் பின்னணியாகத்தான் அந்தப் படங்களை அப்போது மக்கள் பார்த்தார்கள்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சாதி பின்னணி கொண்ட படங்கள் அதிகம் வருகின்றன. அவை ஆண்ட பரம்பரை, அடிமைப் பரம்பரை என்ற கருத்தியல் ரீதியில் வெளிப்படையாக அமைவதால் சமூக வலைத்தளங்களில் அந்தப் படங்களைப் பற்றி கடும் விவாதம் எழுந்தன.

தற்போது, நாளை வெளிவர உள்ள 'திரௌபதி' படம் அப்படி ஒரு சர்ச்சையை டிரைலர் வெளியீட்டின் போதே ஏற்படுத்தியது. இப்படத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள பல சாதி அமைப்புகளும் தன்னிச்சையாக போஸ்டர்களை ஒட்டியும், சமூக வலைத்தளங்களில் படத்திற்கு ஆதரவான கருத்துக்களைப் பதிவிட்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், நாளை படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் ஏதாவது மோதல் வருமோ என்றெல்லாம் கூட சிலர் அச்சப்படுகிறார்கள். நாளை படம் வெளிவந்த பின் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சை எழப் போகிறது என்பதை இப்போதே சொல்லிவிடலாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சாய் பல்லவி - ராஷ்மிகா கைகோர்க்கும் நானி 27சாய் பல்லவி - ராஷ்மிகா கைகோர்க்கும் ... உங்களுக்கும், ஷங்கருக்கும் பொறுப்பு உள்ளது : கமலுக்கு லைகா பதில் உங்களுக்கும், ஷங்கருக்கும் பொறுப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
03 மார், 2020 - 04:38 Report Abuse
meenakshisundaram 'அப்படிப்போடு அருவாளை ?'
Rate this:
27 பிப், 2020 - 17:26 Report Abuse
saravanan Rajan வாழ்த்துக்கள் மோகன்.ஜி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in