Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள்: எங்க மாமா - தமிழுக்கு வந்த இந்தி பிரம்மச்சாரி

27 பிப், 2020 - 10:33 IST
எழுத்தின் அளவு:
50-years-of-Enga-Mama

1968ம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் பிரம்மச்சாரி. ஷம்மி கபூர், ராஜ்ஸ்ரீ, பரன், மும்தாஜ் நடித்திருந்தார்கள். ஷங்கர் ஜெய்கிஷான் இசை அமைத்திருந்தார். பாப்பி சோனே இயக்கி இருந்தார்.

இந்தப் படம் தான் தமிழில் எங்க மாமா என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் ஷம்மி கபூர் கேரக்டரில் சிவாஜியும், ராஜ்ஸ்ரீ கேரக்டரில் ஜெயலலிதாவும், மும்தாஜ் கேரக்டரில் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்தனர். இவர்கள் தவிர கே.பாலாஜி, சோ, தேங்காய் சீனிவாசன், ரமா பிரபா, ஐசரி வேலன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார், மாருதிராவ் ஒளிப்பதிவு செய்தார்.

கோடீஸ்வரரான சிவாஜி கணேசன் ஏழை குழந்தைகள் மீது பாசம் கொண்டு அவர்களுக்கென்று பாதுகாப்பு இல்லம் கட்டுவார். அவர்களை பராமரிக்க தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் ஜெயலலிதாவை காப்பாற்றி வந்து அமர்த்துவார். காலப்போக்கில் இருவரும் காதலிக்க தொடங்கும்போது... என் வயிற்றில் வளர்வது சிவாஜி கணேசனின் குழந்தை என்று இல்லத்துக்குள் வருவார் வெண்ணிற ஆடை நிர்மலா.

சிவாஜியின் எதிரிகள் அவரை வீழ்த்து போடும் திட்டம் இது. இதனை சிவாஜி எப்படி முறியடித்து ஜெயலிதாவை கை பிடிக்கிறார் என்பது கதை. ரொம்ப சிம்பிளான ஒரு கதையை பக்கா கமர்ஷியல் பேக்கேஜில் கொடுத்தார் திருலோகச்சந்தர். படம் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது. "செல்லக்கிளிகளாம் கண்கள்...", "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவா..., நான் தன்னந்தனிக்காட்டு ராஜா" என்ற புகழ்பெற்ற பாடல்கள் இடம்பெற்ற படம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் தமிழுக்கு வரும் மதுஷாலினிமீண்டும் தமிழுக்கு வரும் மதுஷாலினி பாலகிருஷ்ணாவுடன் நடிக்க மறுத்த நயன்தாரா, சோனாக்ஷி: ஓகே சொன்ன அஞ்சலி பாலகிருஷ்ணாவுடன் நடிக்க மறுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vaduvooraan - Chennai ,இந்தியா
28 பிப், 2020 - 23:38 Report Abuse
Vaduvooraan ஜேயார் மூவீஸ் பேனரில் வந்த படம் ஹிந்தியில் ஷங்கர்- ஜெய்கிஷன் இசைக்கு இணையாக மெல்லிசை மன்னர் போட்ட அத்தனை பாடலும் ஹிட் முதலில் எம்ஜியாரை வைத்து எடுப்பதாக இருந்து கால்ஷீட் பிரச்சினை காரணமாக சிவாஜிக்கு கிடைத்த படம் நேற்றுதான் வெலிங்டனில் பார்த்த மாதிரி தோன்றுகிறது. 50 வருடம் ஆகிவிட்டதா? நம்பவே முடியவில்லை..
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
28 பிப், 2020 - 22:07 Report Abuse
Parthasarathy Badrinarayanan தவறான தகவல். எங்கமாமா ஒரு தோல்விப்படம். அருமையான கதை. இந்தியைவிட தமிழில் சூப்பராக இருந்தது. ஆனால 100 நாட்கள் ஓடவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in