விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் கமல், ரேகா, ரேவதி நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியான படம் ‛புன்னகை மன்னன். இப்படத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக மலைப்பகுதியில் இருந்து குதிப்பதற்கு முன் படத்தின் நாயகியான ரேகாவுக்கு இதழோடு இதழ் இணைத்து ஆழமான முத்தம் கொடுப்பார் கமல். இந்தக்காட்சி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
‛‛இந்த காட்சி படமாக்கப்பட்ட போது இதுப்பற்றி யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை. அந்த காட்சி படமாக்கும் முன் பாலசந்தர், நான் உன்னிடம் காதில் சொன்னதை செய் என கமலிடம் கூறினார். டேக் சொன்னதும் கமல் முத்தமிட்டார். நான் அதிர்ச்சியாகிவிட்டேன் ஒரு பேட்டியில் நடிகை ரேகா கூறியிருந்தார்.
சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த பேட்டி இப்போது வைரலானது. ரேகாவின் அனுமதியின்றி முத்தமிட்ட கமல், மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவ தொடங்கின.
இதுப்பற்றி ரேகா நமக்கு அளித்த பேட்டி : எல்லோருக்கும் என்னை திரும்ப பிடித்து விட்டது என நினைக்கிறேன். நயன்தாரா போன்று வைரலாக்கிவிட்டனர். அந்த விஷயம் நடந்து பல வருடமாகிவிட்டது. அப்போது படம் வெளிவந்த சமயத்தில் கொடுத்த பேட்டியை தான் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் சொன்னேன். அதை, இப்போது திடீரென வைரலாக்கி உள்ளனர். யார் செய்த புண்ணியமோ, நல்லதா, கெட்டதா என தெரியவில்லை.
இந்த விவகாரத்தின் நான் யாருக்கும் எதிராக இல்லை. மறைந்த இயக்குனர் பாலசந்தர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். அவரின் படத்திற்கு பின்பு தான் எனக்க நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அதேப்போன்று தான் நடிகர் கமல்ஹாசன் மீது மரியாதை வைத்துள்ளேன். யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. இதை சர்ச்சையாக்கவும் விரும்பவில்லை. இதுதொடர்பாக வரும் கருத்துக்களை நானும் கவனித்து வருகிறேன். யாரும் வருத்தம் தெரிவிக்க வேண்டியது இல்லை. நடந்தது, நடந்து முடிந்துவிட்டது. அந்தப்படத்திற்கு பின் நான் உஷராகிவிட்டேன். நாயகியாக நடித்தபோது சிலர் கவர்ச்சியாக நடிக்க அழைத்தபோது மறுத்துவிட்டேன். கமல் மிகச்சிறந்த நடிகர். பாபநாசம் போன்ற படங்களில் அவரோடு சேர்ந்து நடிக்க வேண்டும். இந்த செய்திக்கு பிறகு கமல், ரஜினி உடன் இரண்டு படங்களில் நடிப்பேன் என நினைக்கிறேன்.
இவ்வாறு ரேகா கூறினார்.