Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டாவிடம் நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

25 பிப், 2020 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Producer-asking-loss-amout-from-Vijaydevarakonda

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்கிற படம் வெளியானது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவிற்கு இருக்கும் புகழ் மற்றும் மார்க்கெட்டை மையப்படுத்தி இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனாலும் வெளியான அன்றைய தினமே இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவியது. விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய நட்டத்தை ஏற்படுத்தியது

இதனால் அவர்கள் தங்களுக்கான நஷ்ட ஈடு கேட்டு, தயாரிப்பாளர் கே.எஸ்.ராமாராவ் வீட்டு கதவை தட்டியுள்ளார்கள். அதைத்தொடர்ந்து ராமாராவ், விஜய் தேவரகொண்டாவிடம் தனக்கு இந்த படத்திற்கான நஷ்ட ஈடு தர வேண்டுமென கேட்டுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிலும் கடைசியாக அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய இரண்டு கோடி ரூபாய்க்கு தனது அபார்ட்மெண்ட் ஒன்றை எழுதிக் கொடுத்தாராம் கே.எஸ்.ராமாராவ். தற்போது இழப்பீட்டு தொகையாக அந்த பங்களாவையே திரும்பவும் கேட்கிறாராம் ராமாராவ்.. அது கூட தன்னிடம் படம் வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டஈட்டு தொகையை பிரித்துக் கொடுப்பதற்கு தான் என்கிறார்கள் திரையுலக வட்டாரத்தில்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அருள்நிதியை இயக்கும் எருமசாணி புகழ்அருள்நிதியை இயக்கும் எருமசாணி புகழ் எனக்கும் சுயமரியாதை இருக்கிறது: பொங்கும் மெஹ்ரீன் எனக்கும் சுயமரியாதை இருக்கிறது: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Abdul Rahman - Madurai,இந்தியா
26 பிப், 2020 - 13:45 Report Abuse
Abdul Rahman இது மிக தவறு. கொடுத்த சம்பளத்தை எப்படி திருப்பி கேட்க முடியும். சினிமா என்பது ஒரு சூதாட்டம் தானே. தெரிந்து தானே விளையாடுகிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in