Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 விபத்து : லைகாவிற்கு கமல் எழுதிய கடிதம்

25 பிப், 2020 - 14:06 IST
எழுத்தின் அளவு:
Indian-2-accident-:-Kamal-wrote-letter-to-Lyca

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‛இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையை அடுத்த ஈவிபி., பிலிம் சிட்டியில் நடக்கிறது. கடந்தவாரம் ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3பேர் பலியாகினர். 9பேர் காயமடைந்தனர்.


இந்த சம்பவம், திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு இனி இதுபோன்று நிகழாத வண்ணம் படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், பணியாளர்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இவ்விபத்து தொடர்பாக பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்கு கமல் சார்பில் ரூ.1 கோடியும், லைகா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடியும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் லைகா நிறுவனத்திற்கு கமல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது : மிகுந்த மன வேதனை உடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பிப்., 19 சம்பவத்தை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. நம்மாடு உண்டு, சிரித்து, பழகி, வேலை செய்தவர்கள் இப்போது இல்லை. விபத்து நேர்ந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தான் தள்ளி இருந்தேன். மயிரிழையில் உயிர் தப்பினேன். என் வேதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

படப்பிடிப்பு தளத்தில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற விபத்துகள் படப்பிடிப்பு குழுவினரின் நம்பிக்கையை குலைக்கும். என்ன விபத்து ஏற்பட்டாலும் அதற்கான இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும். இனி படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதன் முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும். எந்த ஒரு படப்பிடிப்பு துவங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும். நான் உட்பட படப்பிடிப்பு குழுவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி படப்பிடிப்புக்கு திரும்ப வழி வகை செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2 விபத்து எதிரொலி: சிம்பு படத்தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கைஇந்தியன் 2 விபத்து எதிரொலி: சிம்பு ... செல்வராகவன் - தனுஷின் புதுப்பேட்டை 2? செல்வராகவன் - தனுஷின் புதுப்பேட்டை 2?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26 பிப், 2020 - 09:31 Report Abuse
கல்யாணராமன் சு. எல்லாப் பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்கணும்னா, அவங்க சொல்ற மாதிரிதான் படத்தை எடுக்கணும், படப்பிடிப்பை நடத்தணும். நடிகர் ஆசைப்படியோ, இயக்குனர் விருப்பப்படியே படம் எடுப்பதற்கு, தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெற்று, பிறகே படம் எடுக்கவேண்டும். கமலஹாசன், ஷங்கர் போன்ற "பெரிய மனிதர்கள்" அந்த மாதிரி செய்வார்களா? இவரும் வெறும் கடிதம் எழுதுவதன் மூலம், முதலமைச்சராக தகுதி பெற்றுவிட்டார் என்பது "டவுட்" இல்லாமல் தெரிகிறது .............
Rate this:
swega - Dindigul,இந்தியா
26 பிப், 2020 - 07:52 Report Abuse
swega ஆக இவரு கொடுக்கிறதா சொன்ன 1 கோடியையும் தயாரிப்பாளரே கொடுக்கணும்னு மறைமுகமா சொல்லுறாரு
Rate this:
crap - chennai,இந்தியா
26 பிப், 2020 - 06:56 Report Abuse
crap ஐயோ பாவம். இவருக்கு போஸ்ட் பாக்ஸ் எங்க இருக்குன்னு தெரியல. அதுனால அண்ணாச்சி பேப்பர் எடுத்து லெட்டர் எழுதி, போஸ்ட் பாக்ஸ்ல போடாம பிரஸ்ஐ கூப்பிட்டு கொடுத்திருக்கார். மூச்சுக்கு முந்நூறு தரம், நான் சூட்டிங்கில் எல்லா வேலையும் பண்ணுவேன், ரெஃப்ளெக்டர் பிடிப்பேன், தண்ணி ஊத்துவேன் அதனால் தான் நான் உலக நாயகன் என்று பீற்றிக்கொள்ளும் இவர் கொஞ்சம் பாதுகாப்பையும் பார்க்க வேண்டியதுதானே? அட கோமாளி, ஒரு எப்.ஐ.ஆர்க்கே இப்படி பம்மிட்டியே உலக நாயகா
Rate this:
vira - tamil naadu,இந்தியா
25 பிப், 2020 - 16:07 Report Abuse
vira ) அந்த மூன்று பேருக்கும் ஒரு கோடி ஒரு உயிர் விலை மதிக்காதது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in