Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைவி - எழுத்தாளருக்கு நேர்ந்த துரோகம்

25 பிப், 2020 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Thalaivi-:-Writers-disappointment

தமிழ்த் திரையுலகில் அஜயன் பாலா என்றால் இயக்குனர் வட்டாரங்களில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எழுத்தாளர், இயக்குனர் என பல இயக்குனர்களுக்கு அவர்களது திரைக்கதை உருவாக்கத்தில் உதவிகரமாக இருப்பவர்களில் இவரும் ஒருவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தில் தனக்கு நேர்ந்த துரோகத்தைப் பற்றி அவருடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த பதிவையும் நீக்கிவிட்டார். இருந்தாலும் அவர் பதிவிட்ட எழுத்துப் பதிவு இதோ,

“சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக்கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து கோர்ட் வழக்குகளில் ஆதராமாக பயன்படுத்திக்கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரை சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்கு புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நான் நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்பட காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குனர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆய்வு எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என ஒன்றரை வருட உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல் தான்.

இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போதுகூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்கு கிடைக்கப்போகும் அவமானத்தை எண்னி அகமகிழ்ந்திருப்பார் போல, இப்படி எழுதியதால் எனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கியை கொடுக்க மாட்டர்கள் . நட்பிற்காகக்கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரிய வேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை”, என அஜயன் பாலா முகப்புத்தகத்தில் எழுதி நீக்கியுள்ளார்.

தலைவி படத்தின் திரைக்கதையை பாகுபலி எழுத்தாளரான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். அஜயன் பாலாவின் நீக்கப்பட்ட முகப்புத்தகப் பதிவு தலைவி பட விவகாரத்தில் புதிய சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது.


அனைவருக்கும் நன்றி
‛‛இன்று காலை தலைவி பட பிரச்னை தொடர்பாக முகநூலில் இட்ட பதிவுக்கு பலரும் ஆதரவும் வருத்தமும் தெரிவித்தனர். அவர்களுக்கும் தொடர்ந்து இது குறித்து அழைப்பு விடுத்து பேசும் ஊடக இதழியல் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்து நாளை நேரில் பேசி தீர்க்க சென்னை வருவதாகவும் உறுதி கூறியதால் பதிவை நீக்கியுள்ளேன். நாளை சந்திப்புக்குபின் தொடர்புகொள்கிறேன் அனைவருக்கும் நன்றி'' பேஸ்புக்கில் இவர் பதிவிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வலிமைக்காக அஜித்துடன் இணைவேன்: யோகி பாபுவலிமைக்காக அஜித்துடன் இணைவேன்: யோகி ... 'அண்ணாத்த' மோஷன் போஸ்டர் - இவ்வளவு குறைவான பார்வைகளா ? 'அண்ணாத்த' மோஷன் போஸ்டர் - இவ்வளவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in