Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நல்ல கதை என்றால் மொழி பிரச்னையே இல்லை: தீபிகா

25 பிப், 2020 - 11:31 IST
எழுத்தின் அளவு:
No-languages-issue-says-Deepika-Padukone

கன்னட திரையுலகில் அறிமுகம் ஆகி, இந்தி பட உலகிற்கு சென்று, அங்கு முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர், தற்போது கபிர்கான் இயக்கத்தில் 83 என்ற படத்தில் தன்னுடைய கணவர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார்.


பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கின்றனர். அதுதான் 83 படம். இந்தப் படத்தில் கம்பில் தேவாக ரன்வீர் கபூர் நடிக்க, அவருடைய மனைவி ரெமி தேவ்வாக நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். அதேபோல, மகாபாரதம் கதையை திரவுபதி கண்ணோட்டத்தில் படமாக்கவிருக்கின்றனர்; அந்தப் படத்திலும் தீபிகா படுகோன் நடிப்பார் எனத் தெரிகிறது.



இந்நிலையில், மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பீர்களா? என ஒரு பத்திரிகை பேட்டிக்காக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். அதில், தீபிகா படுகோன் கூறியிருப்பதாவது:

வாய்ப்பு வரும் பட்சத்தில் நான் நடிப்பதில் எந்தத் தடையும் இல்லை. எல்லா மொழிகளும் எனக்கும் ஒன்று தான். நல்ல கதையம்சம் இருக்கும் படங்கள் தான் எனக்கு முக்கியம். ஒவ்வொரு நாளும் சூட்டிங் முடித்துவிட்டு நான் வீட்டுக்குத் திரும்பியதும், தற்போது நாம் நடித்துக் கொண்டிருக்கும் படம், நல்ல கதையம்சத்தை கொண்டிருக்கிறதா என்றுதான் யோசிப்பேன். இப்போதும், பல தென்னிந்திய இயக்குநர்கள், வித்தியாச வித்தியாசமான கதைகளுடன் என்னை அணுகுகின்றனர். கதைகளைக் கேட்டிருக்கிறேன். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில் நிச்சயம் நடிப்பேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவாகிறது பாலம் கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கைசினிமாவாகிறது பாலம் கல்யாண ... ரன்வீர்சிங்குடன் இணைந்த மகேஷ்பாபு ரன்வீர்சிங்குடன் இணைந்த மகேஷ்பாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in