பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் | மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் |
ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இந்த படத்தில் இவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் அதற்கு முன்னதாக தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார். மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார்.
தர்பார் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த்திடம் இந்த படத்தில் மஞ்சுவாரியர் நடித்த சில காட்சிகளை போட்டு காட்டினாராம் சந்தோஷ் சிவன். அதில் பரதநாட்டியம் சம்பந்தமான ஒரு சில காட்சிகளில் மஞ்சுவாரியர் நடிப்பை பார்த்து பிரமித்துப்போன ரஜினி, அவரது நடிப்பை சந்தோஷ் சிவனிடம் பாராட்டினாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவல் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் சந்தோஷ்சிவன்.