கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
தமிழ்த் திரையுலகத்தில் எந்த ஒரு விழா நடந்தாலும் அதில் முன்னணி நடிகைகளைப் பார்ப்பது அரிது. அவர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றில் கூட கலந்து கொள்ள மாட்டார்கள். சிலர் அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்.
த்ரிஷா நாயகியாக நடிக்க திருஞானம் இயக்கியுள்ள 'பரமதம் விளையாட்டு' என்ற ஒரு படம் இந்த வாரம் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் படத்திற்காக இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், இந்த நிகழ்வில் படத்தின் கதாநாயகியான த்ரிஷா கலந்து கொள்ளவில்லை.
அது குறித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த தயாரிப்பாளர் டி.சிவா உட்பட சிலர் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு த்ரிஷா வரவில்லை என்றால் அவர் வாங்கிய சம்பளத்தின் ஒரு பகுதியை தயாரிப்பாளருக்குத் திருப்பித் தர வேண்டும் என்று பேசினார்.
தன் சமூக வலைத்தளங்களில் கூட த்ரிஷா 'பரமதம் விளையாட்டு' படம் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் புறக்கணித்து வருகிறார். இப்படத்தை இயக்கியுள்ள திருஞானம், 2002ல் ராகவா லாரன்ஸ், காயத்ரி ரகுராம் நடித்த 'ஸ்டைல்' படத்தைத் தயாரித்தவர்.