பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி |
குக்கூ, ஜோக்கர் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் ராஜு முருகன். அவர் தற்போது இயக்கி உள்ள படம் ‛ஜிப்ஸி'. இதில் ஜீவா, நடாஷா சிங், சன்னி வேயோன், லால் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
ஜிப்ஸி என்றால் எந்த இலக்கும் இல்லாமல் பயணிக்கிற நாடோடி என்று பொருள். இதில் கம்யூனிச சித்தாந்தங்களை பரப்பும் ஒரு பாடகராக ஜீவா நடித்துள்ளார். அவர் ஜிப்ஸியாக இந்தியா முழுக்க சுற்றுகிறார். அவர் பயணத்தில் ஒரு பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறார். அதன் பிறகு வரும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பது கதை.
இந்த படத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாகவும், அரசை கடுமையாக விமர்சிப்பதாகவும், உத்தர பிரதேச முதல்வர் யோகியை கிண்டல் செய்வதாவும் கூறி தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்தது. பின்னர் மறு தணிக்கையில் சில காட்சிகள் நீக்கப்பட்டு யுஏ சான்று வழங்கப்பட்டது. சான்றிதழ் பெற்று பல மாதங்கள் ஆகியும் படம் வெளிவராமல் இருந்தது. தற்போது மார்ச் 6ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.