திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
தேசிய விருது பெற்ற படம் பாரம். இதனை பிரியா கிருஷ்ணசாமி இயக்கி இருந்தார். இது முதியவர்களை கொல்லும் தலைக்கூத்தல் என்ற நிகழ்வை மையப்படுத்தி உருவான படம். இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், பாரம் படத்திற்கு போஸ்டர் ஒட்டுவேன் என்றார். தற்போது இந்த படத்திற்கு தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி உள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி கூறியதாவது: பாரம் படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டி வரும் அன்புக்கு விலை மதிப்பே கிடையாது. அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இவ்வளவு உயரத்தில் இருந்து கொண்டு புதுமுகங்களான எங்கள் மீது அவர் காட்டும் அன்பும் ஆதரவும் பிரமிப்பானது. இந்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை.