Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துப்பாறிவாளன் 2 - மிஷ்கின் நீக்கம்: விஷால் அதிரடி

24 பிப், 2020 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Thuparivalan-2-:-Mysskin-out

2017ல் வெளிவந்த படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கிய இப்படத்தில் விஷால், அனு இம்மானுவேல் பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா நடித்தனர். இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. இதனால் இரண்டாம் பாகம் உருவாகும் என்று படத்தை தயாரித்த விஷால் அறிவித்தார்.

அதன்படி தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. மிஷ்கின் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் லண்டனில் தொடங்கியது. விஷால், பிரசன்னா, ரகுமான், கவுதமி நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. 40 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது. 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் விஷால் சென்னை திரும்பி விட்டார். அதோடு படத்திலிருந்து மிஷ்கினை நீக்கவிட்டதாகவும் கூறப்படுகிறது.

காரணம் என்ன?
லண்டன் படப்பிடிப்பை மிஷ்கின் சரியாக திட்டமிடாததால் விஷாலுக்கு 5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு மிஷ்கின் பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் படத்திற்கான பட்ஜெட்டை இரண்டு மடங்கு உயர்த்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மிஷ்கினை படத்திலிருந்து விஷால் நீக்கிவிட்டார் என்றும், மீதமுள்ள காட்சிகளை விஷாலே இயக்க இருக்கிறார் என்றும் தயாரிப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டேக் இட் ஈஸி!டேக் இட் ஈஸி! ஜெயலலிதா படம்: பிரியாமணி வெளியே, பூர்ணா உள்ளே ஜெயலலிதா படம்: பிரியாமணி வெளியே, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Rajesh - Chennai,இந்தியா
26 பிப், 2020 - 02:54 Report Abuse
Rajesh மத்தவனுக்குன்னா தக்காளி சட்டினி, இவனிங்ககுன்ன ரத்தம் காமெடி பா.....
Rate this:
Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
24 பிப், 2020 - 18:24 Report Abuse
Chandrasekar Ganesh டேக் இட் ஈஸி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in