'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
'உன் நெத்தியில என் கன்-அஐ வைக்கும் போது சாவத் தாண்டி ஒரு பயம் தெரியும் பாரு' என்ற வசனம், வால்டர் படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் இந்த டிரைலர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
பிரபுதிலக் தயாரித்துள்ள படம் வால்டர். நடிகர் சிபி ராஜ் கதாநாயகனாக நடிக்க, அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் படத்தில் ஷ்ரின் கான்ஞ்வாலா கதாநாயகியாக நடித்துள்ளார். ரித்விகா, நட்டி நட்ராஜ், சனம் ஷெட்டி, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் குற்ற விசாரணைத் திரைப்படமாக அமைந்துள்ள இந்தப் படத்தில், கும்பகோணம் ஏ.எஸ்.பி., வால்டராக சிபிராஜ் நடித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் குழந்தைக் கடத்தல் சம்பவங்களை மையமாகக் வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் டிரைலர் ஓடத் துவங்கும்போதே, ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் இந்தியாவில் நான்கு குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் தமிழ்நாட்டில் ஒரு குழந்தை காணாமல் போகிறது என்ற புள்ளி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
"டிரைலர் மற்றும் டீசரில் வருவது போன்ற அதிரடியான வசனங்கள் படம் முழுக்க இடம் பெற்று இருக்கிறது. படத்துக்கு இந்த வசனங்கள் கூடுதல் வலு சேர்க்கும். சிபி ராஜின் வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கும். சமீபத்தில் ரிலீசான சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியிலான படங்களில், இந்தப் படம் வித்தியாசமானதாக இருக்கும்" என்கிறார் படத்தின் இயக்குநர் அன்பு.