பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
எம்.ஜி.ஆர் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‛என் அண்ணன்'. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், ஆர்.முத்துராமன், டி.கே.பகவதி, சோ உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்தப்படம் 1959ம் ஆண்டு வெளிவந்த பியாண்ட் தி பிளேஸ் என்ற நாவவலை தழுவி உருவானது. என் அண்ணன் படம் வெளிவருதற்கு முன்பே தெலுங்கில் போலா ரங்காடு என்ற பெயரில் வெளியானது. பியாண்ட் தி பிளேஸ் என்பது ஒரு துப்பறியும் மர்டர் மிஸ்ட்ரி படம். அந்த கதையில் நம் ஊருக்கு ஏற்ற மாதிரி அண்ணன் தங்கை பாசத்தை கலந்து தெலுங்கு மற்றும் தமிழில் தயாரானது.
எம்.ஜி.ஆரின் தந்தை டி.கே.பகவதி ஒரு மில்லில் மேலாளராக பணியாற்றுகிறார். அந்த மில்லில் எஸ்.எம்.திருப்பதிசாமி கொல்லப்படுகிறார். டி.கே.பகவதிதான் கொலை செய்தார் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். எம்.ஜி.ஆரின் தங்கை விஜயநிர்மலா, முத்துராமனை காதலித்து மணக்கிறார். விஜயநிர்மலா, தன் தந்தை திருப்பதிசாமியை கொன்ற டி.கே.பகவதியின் மகள் என்பதை அறிந்து அவரை விட்டு பிரிந்து விடுகிறார் முத்துராமன்.
தங்கையை தன் கணவரோடு சேர்த்து வைக்க வேண்டும் என்றால் தன் தந்தையை குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டிய கடமை எம்.ஜி.ஆருக்கு வருகிறது. அவர் அந்த கொலையை துப்பறிந்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தந்தையை நிரபராதி என்று நிரூபித்து தங்கையை அவள் கணவனோடு சேர்த்து வைக்கிற கதை.
நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம், கண்ணுக்கு தெரியாதா, கொண்டை ஒரு பக்கம் சரிய சரிய, கடவுள் ஏன் கல்லானான், உள்ளிட்ட தேனினும் இனிய பாடல்களை கொண்ட படம். இந்தப் படத்தை தற்போது டிஜிட்டல் மயமாக்கி வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகிறது.