ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? |
புகழ்பெற்ற பிரமாண்ட திரைப்படமான பாகுபலியில் காளகேயர்கள் என்கிற ஒரு காட்டுமிராண்டி கூட்டத்தினர் பேசும் மொழியாக கிளிக்கி மொழி பயன்படுத்தப்பட்டது. காளகேயர் கூட்டமும், கிளிக்கி மொழியும் முழுக்க முழுக்க கற்பனை. காளகேயர் கூட்டம் இயக்குனர் ராஜமவுலியின் கற்பனை, கிளிக்கி மொழி பாடலாசிரியர் மதன் கார்க்கியின் கற்பனை.
தற்போது மதன் கார்க்கி கிளிக்கி மொழிக்கென்று ஒரு இணையதளம் தொடங்கி, அதனை உலகின் பொதுமொழியாக வளர்க்க இருக்கிறாராம். இந்த இணையதளத்தை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மதன் கார்க்கி கூறியிருப்பதாவது: கிளிக்கி மொழிக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட எழுத்துக்கள் மற்றும் எண்களை இந்தத் தளம் அறிமுகம் செய்யும். கற்பதற்கு உலகின் மிக எளிமையான மொழி என்ற அடைமொழியோடு கிளிக்கி தளம் வெளியிடப்படுகிறது.
மூவாயிரம் சொற்களோடு ஆங்கில-கிளிக்கி-ஆங்கில ஒலி அகராதியும், தங்கள் பெயரைக் கிளிக்கியில் எழுதிப்பார்க்கும் கருவியும், மொழியைப் பயில காணொளிகளும், கணினித்திரையில் தட்டச்சுச் செய்ய மூன்று எழுத்துருக்களும், சொற்களைக் கற்பதற்கான சொல் விளையாட்டுக்களும், பிற மொழிகளில் இருந்து கிளிக்கி மொழிக்கு ஒலிமாற்றும் கருவியும் இந்தத் தளத்தில் கிடைக்கும்.
கிளிக்கி மொழியில் பாடல்களும், கதைகளும், இலக்கண நூல்களும் விரைவில் வெளிவரும். சாதி, மதம், இனம், நாடு போன்ற எல்லைகளின்றி விரிந்து உலகை இணைக்கும் ஒரு மொழியாக கிளிக்கி மொழி இருக்கும் என்று நம்புகிறேன். என்கிறார்.