Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் நஷ்டம் : 6 முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

21 பிப், 2020 - 18:35 IST
எழுத்தின் அளவு:
Darbar-loss-:-6-resolution-made

தர்பார் படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா சாலையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், விநியோகஸ்தர்களைக் காப்பாற்றவும், சினிமாவை வலுவானதாக மாற்றவும் தேவைப்படுவதாகக் கூறி ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 100 நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தீர்மானங்கள் விபரம் வருமாறு....

1. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் இரு தரப்பினரும் இணைந்து மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிப்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

2. தர்பார் திரைப்படத்தினை விநியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் அந்த திரைப்படத்தில் பங்குபெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் அவர்களிடம் தார்மீக ரீதியில் அணுகி மேற்படி பிரச்சனை குறித்து பேசி சுமூக தீர்வு காண்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

3. புதிய திரைப்படம் வெளியாகி 8-வார காலத்திற்கு முன்பு Digital Platform என்று அழைக்கப்படும் Amazon, Netflix போன்றவற்றில் வெளியிட கூடாது என்றும், தற்போது பாலிவுட்டில் பின்பற்றப்படும் நடைமுறை போலவே இங்கு தமிழகத்திலும் பின்பற்றபட வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

4. புதிய திரைப்படம் வெளியாகி 100-நாட்களுக்கு முன்பாக எந்த ஒரு Satellite Channel-களிலும் அந்த திரைப்படம் ஒளிபரப்ப கூடாது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

5. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம், மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கட்டண விகிதாச்சாரத்தியும் (Terms) சரிசெய்ய தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள் ஆக மொத்தம் 18-நபர்கள் என கொண்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு அதனை இனிவரும் காலங்களில் முறைப்படுத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.

6. இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை MG/Outrate அடிப்படையில் விநியோகம் செய்யும் சூழ்நிலை வரும் நிலையில் படத்தினை திரையிட்டு பார்க்காமல் (Preview Show) வியாபாரம் செய்வது இல்லை என்று இரு தரப்பினரும் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
என் மொத்த சொத்தும் நீங்கள் தான்: கமல்என் மொத்த சொத்தும் நீங்கள் தான்: கமல் டிக்டாக் மோகம் - யோகிபாபுவிற்கு வந்த வினை : வருத்தம் தெரிவித்த துணை நடிகை டிக்டாக் மோகம் - யோகிபாபுவிற்கு வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Narayanan.S - Chennai,இந்தியா
25 பிப், 2020 - 17:09 Report Abuse
Narayanan.S இந்த தீர்மானத்தில் எவனும் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க சொல்லவில்லையே. அரசுக்கு கொடுக்கப்படும் 8% மற்றும் 12% வரிதான் கண்ணுக்கு தெரிகிறது. அதை நீக்கிவிட்டால் நட்டமே வராது என்று சொல்லமுடியுமா? இந்த வரிகள் குறைத்த பிறகு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இன்னும் பணம் பார்ப்பார்கள்.
Rate this:
Covim-20 - Soriyaar land,இந்தியா
24 பிப், 2020 - 21:43 Report Abuse
Covim-20 அவனவன் இங்கே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து பதிநைந்தாயிரம், இருபதாயிரம் மாத சம்பளம் வாங்குவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது... இவனுகளுக்கு என்னடா என்றால் 100 கோடியாம்... 200 கோடியாம்... என்னங்கடா இது?? பேராசை பிடித்த சினிமாத்தொழில் அழிந்து போகக்கடவது...
Rate this:
tamilan - CHENNAI,இந்தியா
24 பிப், 2020 - 13:33 Report Abuse
tamilan IVLO THEERMAANAM POTTA NEENGAL INI RAJINI PADATHTHAI VAANGUVADHU ILLAI RU THEERMAAM POTTEENGALAA. ADHIGA LAABAM VANDHAAL YAARUM VAAYAI THIRAKKA MATTEERGAL. THANIYA ANUBAVIPPEENGA. NASTAM VANDHAAL MATRAVAN THALAIYIL ETRUVEERGAL. NEENGAL UNMAIYILEYE ROSHAM ULLAVARGALAAGA IRUNDHAAL INI RAJINI PADATHTHAI VAANGA MAATTOM RU THEERMAANAM EDUNGAL.
Rate this:
sathyam - Delhi,இந்தியா
24 பிப், 2020 - 11:48 Report Abuse
sathyam சினிமா ஒரு சூதாட்டம். அதில் பெரிய விதிமுறைகள் எதுவும் சரி வராது. ஒரே வழி, பெரிய நடிகர்கள் அரை பகுதி சம்பளம், மீதி பகுதி கிடைக்கும் லாபத்தில் பங்கு என உடன் பட்டால் மட்டுமே கொஞ்சம் தாக்கு பிடிக்கலாம். தியேட்டர்கள் கொஞ்சம் கட்டணம் குறைத்தால் இன்னும் பலன் ஏற்படும்.
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
22 பிப், 2020 - 16:14 Report Abuse
Anvardeen ரஜினி எப்போ வந்து என் படத்தை அதிகமான விலைக்கு வாங்கி கொள்ளலாம் நூறு ரூபாய் டிக்கெட் ஆயிரம் ரூபாய் க்கு விக்கலாம் ன்னு சொன்னார் உங்கள் பேராசை பெரு நஷ்டம் .. லாபம் வரும்போது நீங்கள் ரஜினி எதாவது பங்கு கொடுத்தீர்களா ? நஷ்டம் வரும்போது மட்டும் என்ன விளக்கமது ஆலோசனை கூட்டம் இதுல அந்த உளறுவாயன் டீ ஆர் வேற ... அவன் பையன் நாலா எத்தனை பட தயாரிப்பாளர்கள் நஷ்டம் ..
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in