ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருக்கும் ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் நடந்த இந்தியன் 2 படபிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூவர் பலியாகினர். இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்ப்பதற்கு, பெப்சி சார்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையைச் சாராத பெரும் கிரேன் போன்ற உபகரணங்களை படபிடிப்புக்கு பயன்படுத்த கொண்டு வரும் போது, அதைப் பயன்படுத்தும் சினிமா துறையில் இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், அந்த கிரேன் இயக்குபவர்களுக்கும் புரிதல் ஏற்பட்ட பின்னரே படப்பிடிப்பு தொடங்கப்படும். திரைப்படத்துறை சாராத உபகரணங்கள் பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட சம்மேளனத்திடம் ஒப்புதல் பெறும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே காலா மற்றும் பிகில் படப்பிடிப்புகளின் போதும் இப்படிப்பட்ட விபத்தும் உயிர் இழப்பும் ஏற்பட்டது. அதற்கு காரணம், விபத்து ஏற்பட்டதும் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவிக்காக மருத்துமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் இல்லாததுதான்.
ஏவி.எம்., விஜயா போன்ற ஸ்டூடியோக்களின் உரிமையாளர்களே தயாரிப்பாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு சினித் துறையில் ஏற்படும் பிரச்னைகள் குறித்துத் தெரியும். அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மீது அன்பாக இருந்தனர். ஆனால் தற்போது ஸ்டுடியோ வைத்துள்ளவர்களுக்கு, சினிமா பற்றி எதுவுமே தெரியாது. அவர்களுக்கு தொழில்நுட்ப கலைஞர்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. குறிப்பாக ஈ.வி.பி.,யைப் பொறுத்த வரை, எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. இறந்த உடலை ஏற்றுவதற்கான ஆம்புலன்ஸ் வசதி கூட அங்கு இல்லை. எனவே, இனிமேல் ஸ்டூடியோக்களில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து ஒப்பந்தம் செய்த பின்னரே அவர்களுடன் தொழில் செய்வோம். இல்லையெனில், அவர்களுடன் படப்பிடிப்பு நடத்த முடியாது.
ஒருவேளை, ஏவி.எம்.,ல் இந்த விபத்து நடந்திருந்தால் மருத்துவமனைக்கு, தயாரிப்பாளர் சரவணன் பாதிக்கப்பட்டவர்களை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்திருப்பார். ஆனால், இவர்கள் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை. எனவே, எங்கள் தொழிலாளர்கள் பணிபுரியும் போது ,அவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிக்கிறார்களோ, அவர்களுடன் தான் படப்பிடிப்பு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.