Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“பெண்கள் மேல் சிவப்பு வண்ணம் தீட்டாதீர்கள்” : அதிரவைக்கும் ரம்யா நம்பீசனின் குறும்படம்

21 பிப், 2020 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Ramya-Nambessans-unhide-Shortfilm

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென நிரந்தரமாக ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை ரம்யா நம்பீசன். நடிகை, பாடகி என இருமுகம் கொண்ட ரம்யா நம்பீசன், தற்போது அன் ஹைடு என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்தி உள்ளார்.

இந்த குறும்படம் காட்சிகளாக அல்லாமல், ரம்யா நம்பீசனின் ஆக்ரோஷமான குரலில் மூன்று நிமிட குறும்படமாக உருவாகியுள்ளது. பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளை எடுத்துரைக்கும் விதமாக இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைகளும் ஆண் வர்க்கத்தை தீயாக சுடும் விதத்தில் தான் அமைந்துள்ளது.

“இந்த டிரஸ் போட்டு குனிந்தால் மார்பு தெரியும்.. இந்த டிரஸ் போட்டால் கால் தெரியும்.. இந்த டிரஸ் போட்டால் தோள் தெரியும்.. புடவை கட்டினால் இடுப்பு தெரியும்.. எங்களை எப்போ தான் உங்களுக்கு முழுசா மனுஷியா தெரியும்..? உடம்பை மறைக்க துணி தேவை.. வக்கிரத்தை மறைக்க என்ன தேவை..? இல்லை, முழுசா நாங்க மறைஞ்சு விடட்டுமா..?
இல்லை மறையப்போவது இல்லை.. எங்களுக்கு சரி என்றால் மறைக்க போறதும் இல்லை.. இந்த அறையில் நாங்கள் எதையும் மறைக்கிறது இல்லை.. மறுக்கிறதும் இல்லை.. மறைக்காமல் வைத்திருந்தாலும் சிலர் இங்க மிருகமா மாறாம இருக்கிறது இல்லை.. இந்த கீறல்களும், காயங்களும் எங்களுது இல்ல.. அவங்க பலவீனம்.. ஆனாலும் என்னைத் தொடணும்னா என்னோட அனுமதி வேண்டும்.. டிரஸ் போட்டு மூடுறவங்களையும் விடுறதில்லை.. பிறந்த குழந்தையையும் விடுறது இல்ல..

ஆண்களுக்கு மிகப் பெரிய மார்பு இருந்தால் அவரை கர்வம் பிடித்துக் கொள்கிறது.. ஆனால் ஒரு பெண் மிகப்பெரிய மார்பை கொண்டிருந்தால் பயம் தான் அவளைப் பிடித்துக் கொள்கிறது.. செக்ஸிலும் கூட வேறுபாடா..? செக்ஸில் அன்பு இல்லையா..? காமம், காதலோடு ஒன்று சேரும்போது புனிதம் ஆகுது.. காமம் வக்கிரத்தோடு சேரும்போது மிருகம் ஆகுது.. காமத்துக்கு இலக்கணம் வகுக்க தெரிந்த தேசத்தில் நிமிஷத்துக்கு ஒரு பலாத்காரம்.. ஏற்க முடியலை..

இங்கே எத்தனை பேருக்கு எதிரே உட்கார்ந்து இருக்கிற பொண்ணோட முகத்தை மட்டும் பார்த்து பேசுகிற பக்குவம் இருக்கு..? அம்மாகிட்டயும் அக்காகிட்டயும் கண்ணை பாத்து தானே பேசறோம்..? அந்த அம்மாவும் அக்காவும் அத்த பொண்ணுகிட்டேயும் கண்ணை பார்த்து தான் பேசணும்னு சொல்லித்தரணும்.. அந்த அம்மாக்களும் அக்காக்களும் நெனச்சா இந்த கற்பழிப்புகள் குறையாதா என்ன..?

நடுரோட்டில் தூக்கில் தொங்க விடலாம்.. ஆண் உறுப்பை அகற்றலாம்.. நிற்க வைத்து சுடலாம்.. உயிரோடு கொளுத்தி விடலாம்.. ஏன் குடும்பத்தோடு நாடு கடத்தி விடலாம்.. ஆனால் குற்றங்கள் குறையுமா..? நடக்காமல் இருக்குமா..? அப்படின்னா என்ன தேவை..? பயமா..? சுய ஒழுக்கமா..? பெண்கள் இந்த உலகத்திற்கு வண்ணம் தீட்ட வந்தவர்கள்.. எங்க மேல சிவப்பு வண்ணம்(ரத்தத்தை) தீட்டாதீர்கள்.. இந்த உலகம் நம் எல்லாருக்கும் சொந்தமானது.. ஒன்றாக இருந்து அதை அழகாக மாற்ற முயற்சிப்போம்.. வாழுங்கள்.. வாழ விடுங்கள்” என சாட்டையடி வசனங்களுடன் அந்த குறும்படம் முடிகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை ஒருவரின் விவகாரத்தில் சிக்கிய நடிகர் திலீப்புக்கு எதிராக சில நடிகைகள் போர்க்கொடி தூக்கினர். அவர்களில் ரம்யா நம்பீசன் மிக முக்கியமானவர். பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி வேண்டும் என்பதற்காக மலையாள நடிகர் சங்கத்தை விட்டு விலகிய ரம்யா நம்பீசன் உள்ளிட்ட சில நடிகைகள், சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை துவங்கி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தான் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக இந்த அன் ஹைடு என்கிற குறும்படத்தை உருவாக்கியுள்ளார் ரம்யா நம்பீசன்..

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2 தளத்தில் விபத்து : கமல், ஷங்கருக்கு சம்மன்?இந்தியன் 2 தளத்தில் விபத்து : கமல், ... மீண்டும் ஹீரோவாக நடிக்கும் கிஷோர் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் கிஷோர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

meenakshisundaram - bangalore,இந்தியா
25 பிப், 2020 - 04:37 Report Abuse
meenakshisundaram ஆன் பெண் உறவு படைப்பிலேயே உள்ளது ,ஆனால் கட்டுப்பாடு வேண்டும் என்றே பழக்க வழக்கங்களை சடங்காக வழங்கினார்கள் நமது பெரியவர்கள், ஆனால் வேலி தாண்டும் வெள்ளாடுகளை பாராட்டவும் சிலர் இருப்பதே இதன் காரணம். 'தையடா தையடா ' தான் இது
Rate this:
Indian-இந்தியன் - M City,இந்தியா
22 பிப், 2020 - 17:34 Report Abuse
Indian-இந்தியன் சினிமாவை குறைத்துக்கணம். எடுக்கின்ற சினிமா ஒழுக்கமானதாக இருக்கவேண்டும். சமூக வலை தளங்களை மிகவும் தேவயானதற்கான விஷயங்களுக்கும் மட்டும் பயன்படுத்தவும் அதேபோல் மொபைல் போன்களையும். பாலால்க்காரம், பாலியல் போன்ற குற்றங்களை பற்றின செய்திகளை சுருக்கமாக வெளியிடவும்...... அப்படியானால் குற்றங்கள் குறையுமா ??.... தெரியவில்லையே.....
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
22 பிப், 2020 - 15:46 Report Abuse
venkat Iyer நானும் இந்த உண்மையை உணர்கின்றேன்.குறிப்பாக சினிமாதுறையில் பெண்களுக்கு பாதுகாப்பு என்று ஒன்று கிடையாது.முதிர்ந்த நடிகர்கள் கூட இளம் நடிகைகளின் காமத்திற்கு அலைகின்றனர்.நானும் மகாராஷ்ட்ரா புறாவின் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலில் இரவில் தங்கினேன்.அங்கு இந்தி பட சூட்டிங் முடிந்து இரவு ஒரு மணி வாக்கில் அங்கு தங்கினார்கள்.படத்தின் கதாநாயகன் ஒரு துணை நடிகையை அவரது அறைக்கு அழைத்து சென்றார்.நான் ரூம் நாயிடம் பேச்சு கொடுத்த போது சனிக்கிழமை வந்தாலே ,அவர் ஒரு துணை நடிகையுடன் சேர்ந்து மது குடிப்பது டன் உறவும் பெண்ணுடன் வைத்து கொள்வார்.பல நடிக்க. வரும் புது பெண்கள் தயாரிப்பாளர்களுக்கு இந்த ஹேட்டலுக்கு வந்து தன்னை அவர்களிடம் அர்பணித்து வாய்ப்பை பெறுகின்றனர்.இது சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி போலா ஆகிவிட்டது.அவர்களை ஈசன் வந்து கூட கட்டுப்படுத்த முடியாது என்று வருத்தப்பட்டார்.இதுதான் உலகம்.
Rate this:
21 பிப், 2020 - 14:25 Report Abuse
Arunachalam, Chennai என்னவோ போங்க?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in