Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 தளத்தில் விபத்து : கமல், ஷங்கருக்கு சம்மன்?

21 பிப், 2020 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Police-decides-to-send-summon-for-Kamal,-Shankar-regarding-accident-in-Indian-2-spot

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கமல் மற்றும் இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நசரப்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. இந்நிலையில் பிப்.,19 அன்று இரவு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைனா நிறுவனம் மீது ஏற்கனவே 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் விபத்து நடந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபலமான, 'குட்டி ஸ்டோரி!'பிரபலமான, 'குட்டி ஸ்டோரி!' “பெண்கள் மேல் சிவப்பு வண்ணம் தீட்டாதீர்கள்” : அதிரவைக்கும் ரம்யா நம்பீசனின் குறும்படம் “பெண்கள் மேல் சிவப்பு வண்ணம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in