Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

போலீஸ் கேரக்டர் எனக்கு நன்றாக பொருந்துகிறது!

21 பிப், 2020 - 02:38 IST
எழுத்தின் அளவு:
police-character-fit-for-me-says-Arun-Vijay

தமிழ் திரையுலகில், 25 ஆண்டுகளை கடந்த அருண் விஜய் நடித்த, மாபியா படம், இந்த வாரம் வெளியாகிறது; அந்த பட அனுபவம் குறித்து, அவருடன் பேசியதிலிருந்து:

மாபியா படத்தை பற்றி சொல்லுங்கள்?


மாபியா என்றாலே, எந்த மாதிரி கதைக்களம் என தெரிந்திருக்கும். இந்த கதைக்களம் எனக்கு புதுசு. இந்த மாதிரி கதையை பார்த்து, ரொம்ப நாட்களாகி விட்டன. நம்மைச் சுற்றி நடக்கிற நிறைய விஷயங்கள் நமக்கு தெரிவதில்லை. தெரிய வரும் போது இப்படியெல்லாம் நடக்குமா என சந்தேகம் வரும். அந்த மாதிரி கவனிக்கப்படாத விஷயங்கள், மாபியா படத்திற்கு பின் கவனிக்கப்படும்.ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை, ஒவ்வொரு நொடியும் படத்தை ரசிக்கலாம்.


படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் எப்படி?


அவரது முதல் படம், துருவங்கள் 16. அந்த படம் எப்படி இருந்தது என, அனைவருக்கும் தெரியும். மாபியா படத்தை, 'கிளியர் கட்'டாக செதுக்கியுள்ளார். அவரிடம் எப்படி எதிர்பார்த்தேனோ, அதை அப்படியே கொடுத்தார்.


குற்றம் படத்திற்கு பின், மீண்டும் போலீசாக நடிக்கிறீர்களா?


போலீஸ் கேரக்டர், எனக்கு நன்றாக பொருந்துகிறது என்கின்றனர். சினம் படத்தில் மீண்டும் போலீசாக நடிக்கிறேன். இந்த கேரக்டரில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான கதையாக, இது இருக்கும்.


பிரசன்னா உடன் நடித்த அனுபவம்


?திறமையான நடிகர்; அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இதற்கு முன்பே அவருடன் பழக்கம் இருந்ததால், நடிப்பது எளிதாக இருந்தது. பிரசன்னா மட்டுமின்றி ப்ரியா பவானி, பாலா என பலரும், 100 சதவீத உழைப்பை வழங்கினர். கூடிய விரைவில் ப்ரியா பவானியும் ஆக் ஷனில் அசத்துவார்.


எந்த மாதிரி கதைகளை தேர்வு செய்கிறீர்கள்?


வில்லன், நாயகன் கேரக்டர்களை தாண்டி, ரசிகர்கள் விரும்பும் வகையிலான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்மார்ட் வில்லன் பிரசன்னாஸ்மார்ட் வில்லன் பிரசன்னா முடியாதது எதுவுமில்லை: நடிகர் அருண் விஜய் பளீச் முடியாதது எதுவுமில்லை: நடிகர் அருண் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
21 பிப், 2020 - 10:47 Report Abuse
LAX ஆமா.. அளவுக்கதிகமா குடிச்சுட்டு கார் ஓட்டி, போதையில் போலீஸ் வாகனத்தின் மீதே மோதிவிட்டு, சினிமாவில் நாட்டாமை வேடம் கட்டும் அப்பன் துணையுடன், போலீஸையே ஏமாத்தி எஸ்கேப்பாகி, உன்னமாதிரி க்கெல்லாம் போலீஸில் உள்ள கருப்பு ஆடுகள் வேடமும் பொருத்தமாகவே இருக்கும்.. த்தூ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in