Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூவர் உயிரிழப்பு: கமல் ரூ.1 கோடி, லைகா ரூ.2 கோடி நிதி

20 பிப், 2020 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Kamal-announced-Rs.1-crore-compensation-who-dead-in-indian-2-shooting-spot

சென்னையை அடுத்துள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வந்த ‛இந்தியன் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 10பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இறந்தவர்களுக்கு கமல் இரங்கல் தெரிவித்ததோடு, அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தொடர்ந்து சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு கமல் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்தாக கருதுகிறேன். இனி போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த துறையும் இதில் பங்கேற்க வேண்டும். இதை வேண்டுகோளாக யாரும் நினைக்க வேண்டாம், இது நமது கடமை.

விபத்துக்கு ஏழை, பணக்காரன் என்றெல்லாம் தெரியாது. சுனாமி மாதிரி வந்து போய் விடும். இந்த அறைக்குள்(பிணவறை) நானும் இருக்க கூடும். நூழிலையில் உயிர் தப்பினேன். 4 நொடிகளுக்கு முன்பு வரை அங்கு தான் இருந்தேன். ரூ.100 கோடி, ரூ.200 கோடி என மார் தட்டிக் கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கு கூட பாதுகாப்பு தர முடியவில்லை. இது அவமானதாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிரோடு இல்லை. உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றார்.

லைகா 2 கோடி நிதி
கமலை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு மொத்தகமாக சேர்ந்து ரூ.2 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஷங்கர் அஞ்சலி
கமலை போலவே இந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கரும், இறந்தவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பிப்ரவரி 21 ரிலீஸ்: மாபியா-வை முந்துமா மற்ற படங்கள்?பிப்ரவரி 21 ரிலீஸ்: மாபியா-வை முந்துமா ... அதிர்ச்சியிலிருந்து மீளாத காஜல் அதிர்ச்சியிலிருந்து மீளாத காஜல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

sundar -  ( Posted via: Dinamalar Android App )
20 பிப், 2020 - 22:24 Report Abuse
sundar Enna da great ithu?
Rate this:
swega - Dindigul,இந்தியா
20 பிப், 2020 - 21:08 Report Abuse
swega அவரு அரசியலுக்கு வந்து ரொம்ப தேவையில்லாம பேசிட்டதால காசு போச்சேன்னு மனசுக்குள்ள அழுதுக்கிட்டே கொடுக்கிறார். இல்லைனா நான் வருமான வரி காட்டுறேன். அதனாலே அரசாங்கம் தான் நஷ்ட ஈடு கொடுக்கணும்னு ஜூட் விட்டிருப்பார்.
Rate this:
Kamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20 பிப், 2020 - 18:38 Report Abuse
Kamal கமல் ஐஸ் கிரேட். ஒரு கோடி நிச்சயம் அவர்ஹளுக்கு உதவிகா இருக்கும்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
21 பிப், 2020 - 00:56Report Abuse
Aarkayஉயிர் விலைமதிப்பற்றது. ஷங்கரும், கமாலும் கோடிகளைக்குவிக்க அநியாயமாய் மூன்று உயிர்கள் பலி இதில், சம்பந்தப்பட்ட காட்சி வரும்போது, உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு கண்ணீரஞ்சலி என டைட்டில் கார்ட் வேறு போட்டு மரணத்தையும் காசாக்குவார்கள் பணப்பிசாசுகள் It's time, we shun movies and sp our leisure time with family and fris productively through other means.......
Rate this:
s vinayak - chennai,இந்தியா
20 பிப், 2020 - 17:51 Report Abuse
s vinayak கோடிகளைபற்றி பேசும் கேடி.
Rate this:
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in