ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறவர் போஸ் வெங்கட். தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் கன்னி மாடம் எனும் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரித்துள்ளார். ஹரிஷ் சாய் இசையமைத்துள்ளார். ஹரிஷ் இனியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி போஸ் வெங்கட் கூறியதாவது: கிராமத்திலிருந்து சென்னை வந்த ஒரு காதல் ஜோடியின் கதை. நான் நடிக்க வருவதற்கு முன்பு ஆட்டோ டிரைவராக இருந்தேன். அப்போது நான் குடியிருந்த வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த காதல் ஜோடிகளின் கதையைத்தான் படமாக இயக்கி உள்ளேன்.
கன்னி மாடம் என்றால் அந்தக் காலத்தில் பெண்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக இருந்த இடம். இன்றைக்கு கன்னி மாடங்கள் இல்லை. மாறாக பெண்களை சிதைக்கும் இடங்கள் தான் இருக்கிறது. இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவாபுறம் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.