Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நோ பாலிடிக்ஸ், ஒன்லி சினிமா: மன்சூரலிகான்

19 பிப், 2020 - 12:22 IST
எழுத்தின் அளவு:
No-politics,-only-cinema-:-Actor-Mansoor-Ali-Khan-decides

தேர்தலில் போட்டி, அரசியல் பிரச்சாரம், கைது, சிறை என்று பரபரப்பாக இருந்த மன்சூரலிகான் இப்போது அமைதியாகி விட்டார். எங்கிருக்கிறார் என்பதுகூட தெரியாமல் இருந்தார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. ஒரு வழக்கில் போலீஸ் அவரை தேடுவதாகவும் அதனால் அவர் தலைமறைவாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: என் மகளுக்குத் திருமண வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மகளுக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது கனவு. அதற்காக அவர் படித்துக் கொண்டிருக்கிறார். படிப்பின் போதே திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இப்போது நிறைய படங்களிலும் நடித்து வருகிறேன். கவுதம் மேனன் இயக்கும் படம், இயக்குநர் சற்குணத்தின் படம், தங்கர் பச்சான் இயக்கும் படம், ரெஜினா கசன்ட்ராவோடு ஒரு படம், விமல், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறேன். மனிதர்கள் மீதான அன்பும் செய்யும் தொழில் மீதான பற்றும் தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது. சினிமா வாழ்விலும், என் வீட்டிலும் இன்னும் பல நல்ல செய்திகள் வரும். என்கிறார்.

குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காகவும், குடும்ப நலன் கருதியும் அரசியலில் இருந்து விலகி, சினிமாவில் தீவிர கவனம் செலுத்த மன்சூரலிகான் முடிவு செய்திருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஹன்சிகா படத்தில் இணைந்த ஸ்ரீகாந்த்ஹன்சிகா படத்தில் இணைந்த ஸ்ரீகாந்த் கன்னி மாடத்தில் உண்மை கதை: போஸ் வெங்கட் கன்னி மாடத்தில் உண்மை கதை: போஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

kumar - Erode,இந்தியா
21 பிப், 2020 - 00:17 Report Abuse
kumar இவர் தான சில தினங்களுக்கு முன்னாள் CAA/NRC க்கு எதிராக முஸ்லிம்கள் கூட்டத்தில் தன குடும்பத்துடன் பங்கு கொண்டார். தேச துரோகி
Rate this:
sri - trichy,இந்தியா
20 பிப், 2020 - 16:22 Report Abuse
sri தமிழ்நாட்டிற்கு ஒரு முதல்வர் மிஸ்ஸிங்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
20 பிப், 2020 - 15:12 Report Abuse
madhavan rajan சினிமாவிலேயே பாலிடிக்ஸ் பண்றவராச்சே இவரு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in