Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டர்-ல் விஜய் மாணவர் தலைவர்

19 பிப், 2020 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Vijay-acting-as-Student-leader-in-Master

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், நாசர், சஞ்சீவ், ரம்யா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

படத்தின் கதை பற்றி வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு: இந்த படம் கல்வி தொடர்பான விஷயத்தை பேச இருக்கிறது. இதில் விஜய் செயிண்ட் ஜெபரீஷ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் படிக்கிறார். மாணவர்கள் தலைவராகவும் இருக்கிறார். வெளியில் இருந்து மாணவர்களை போதை மருந்துக்கு அடிமை ஆக்கியும், ஜாதி வாரியாக பிரித்து மோத விட்டும் வில்லத்தனம் செய்யும் முன்னாள் மாணவராக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த இருவருக்கும் இடையிலான மோதல் தான் படம்.

ஆர்ட்ஸ் காலேஜ் என்றாலே தகுதி குறைவாக நினைக்கிற எண்ணத்தை மாற்றி அதை எப்படி உயர்ந்த ஒரு கல்வி அமைப்பாக விஜய் மாற்றுகிறார் என்பது தான் திரைக்கதை என்கிறார்கள். இன்றைய கல்வி முறை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் படம், கல்வி முறை எப்படி மாற வேண்டும் என்பதையும் சொல்கிறதாம். விஜய்யை கல்லூரி மாணவர்கள் அனைவரும் மாஸ்டர் என்று செல்லமாக அழைப்பார்கள். அதுவே படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மதுமிதாவின் அடுத்த படம்!மதுமிதாவின் அடுத்த படம்! வருமானவரித் துறையில் ஆஜர்: பைனான்சியர் அன்புசெழியனுக்கு அபராதம்? வருமானவரித் துறையில் ஆஜர்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Endrum Indian - Kolkata,இந்தியா
19 பிப், 2020 - 17:10 Report Abuse
Endrum Indian 60 வயதை கடந்த பின்னும் பின்னும் திமுக இளைஞரணித் தலைவராக இருந்தவர் தானே சுடலை அதே போல 50 ஐ தொடும்போதும் மாணவர். இதற்கு இன்னொரு அர்த்தம் வயதிற்கேற்ப முதிர்ச்சி வரவில்லை என்று அர்த்தம்.
Rate this:
Anand - chennai,இந்தியா
19 பிப், 2020 - 14:25 Report Abuse
Anand முக்கா கிழடு ஆகி இன்னும் மாணவனாக.... யோக்கியமானாக பேசி நடித்து தீவிரவாதிகளுக்கும் / மிஷனரிகளுக்கும் துணைபோகும் இவனைப் போன்றவர்களை வெளியில் விட்டுவைப்பது மிகவும் ஆபத்து.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
19 பிப், 2020 - 13:26 Report Abuse
s t rajan 50 வயது மாணவர் ? பெயிலாகி பெஞ்சைத் தேய்ப்பவரா ? எத்சனை நாளுக்குத் தான் இந்தக் கிழடு தட்டியவர்களை எல்லாம் ஸ்டூடண்டாகவே இருப்பார்கள்...... பாஸ் ஆகவே மாட்டார்களா ?
Rate this:
kasi -  ( Posted via: Dinamalar Android App )
19 பிப், 2020 - 13:09 Report Abuse
kasi Kamal in Namavar copy I think
Rate this:
vira - tamil naadu,இந்தியா
19 பிப், 2020 - 13:08 Report Abuse
vira சேவியர் அவர்களே அடுத்து வருமான வரி சோதனை உங்கள் வீட்டில்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in