அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்குப் போட்டியாக உருவாகி வரும் சிவகார்த்திகேயன் நேற்று(பிப்., 17) அவருடைய 36வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் 'டாக்டர், அயலான்' படங்களின் முதல் பார்வைகளை வெளியிட்டார்கள்.
'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் 'அயலான்' படம், ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. வேற்று கிரகவாசி பற்றிய பேன்டசி படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பார்வையில் ஏலியன், சிவகார்த்திகேயன் இருக்கும் போஸ்டர் இடம் பெற்றது.
'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மற்றொரு படம் 'டாக்டர்'. இப்படத்தின் முதல் பாவையும் நேற்று வெளியிடப்பட்டது. கையில் ஆபரேஷன் கத்தியுடன் சிவகார்த்திகேயன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படம் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.