திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் 'திரௌபதி'. இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளிவந்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சாதி மோதல், வேற்று சாதி காதல், நாடகக் காதல் என்ற விஷயங்கள் படத்தில் இருப்பதால் இரு வேறு சாதியினருக்கிடையே இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் கடும் மோதலை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் நடந்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் முடிந்து, யு-ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். பிப்.,28ல் படத்தை வெளியிடுகின்றனர்.
அடுத்த கட்ட மோதலை சந்திக்க சமூக வலைத்தளங்கள் தயாராகப் போகின்றன.