Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக் நரேன் தான் அடுத்த கே.எஸ்.ரவிக்குமார், ஹரி

18 பிப், 2020 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Karthick-Naren-is-next-KS-Ravikumar-says-Director-Hari

தமிழ் சினிமாவில் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமானவர்களில் கார்த்திக் நரேனும் ஒருவர். தன்னுடைய 22வது வயதில் 2016ல் வெளிவந்த துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இரண்டாவது படமாக நரகாசூரன் படத்தை எடுத்து முடித்துவிட்டார். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அப்படம் வெளியாகாமலேயே உள்ளது.

தன்னுடைய மூன்றாவது படமாக கார்த்திக் நரேன் இயக்கி முடித்துளள மாபியா படம் இந்த வாரம் 21ம் தேதி வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் பிரசன்னா, “இந்தப் படத்தை 33 நாட்களில் முடித்துவிட்டார் கார்த்திக் நரேன். அந்த அளவிற்கு படப்பிடிப்புக்கு மிகவும் தயாராக வருவார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 2 லட்ச ரூபாய் வாடகை கொண்ட ஒரு சூட்டில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு மூன்று நாட்களில் எடுக்க வேண்டிய ஒரு காட்சியை ஒரே நாளில் எடுத்து முடித்தார். படப்பிடிப்புக்கு வரும் போது நான் கூட ஒரு சந்தேகத்துடன்தான் வந்தேன். அந்த அளவிற்கு திட்டமிட்டு 3 நாள் வாடகை, 3 நாள் படப்பிடிப்பு செலவு ஆகியவற்றை தயாரிப்பாளருக்கு மிச்சப்படுத்தினார். என்னைப் பொறுத்தவரையில் கார்த்திக் நரேன் தான் அடுத்த கே.எஸ்.ரவிக்குமார், ஹரி,” என்றார்.

இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஹரி ஆகியோர் அவர்களின் தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்பில் வீண் செலவுகளை வைக்க மாட்டார்கள். முடிந்தவரையில் தயாரிப்பாளர்களுக்கு செலவுகளை மிச்சப்படுத்துவார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மூடப்படும் ராமா நாயுடு ஸ்டுடியோஸ் ?மூடப்படும் ராமா நாயுடு ஸ்டுடியோஸ் ? நெற்றிக்கண் ரீ-மேக் விவகாரம் : விசுவிற்கு கவிதாலயா பதில் நெற்றிக்கண் ரீ-மேக் விவகாரம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in