Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் பாட்டும் காப்பி: கேலிக்குள்ளாகும் அனிருத்

15 பிப், 2020 - 17:02 IST
எழுத்தின் அளவு:
Vijay-song-also-copy:-Anirudh-Trolled-by-fans

தான் நடிக்கும் மாஸ்டர் படத்துக்காக ஒரு குட்டிக் கதை என்ற பாடலை, நடிகர் விஜய் பாடி அதை, காதலர் தினத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். டிசைன் டிசைனாக பிரச்னைகள் வந்து போனாலும் கூலாகவே இருங்கள் விஜய் பாடியுள்ள இந்த பாடலுக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

முழுவதும் ஆங்கிலத்தில் அமைந்த ஒரு பாடலில் அங்கங்கே தமிழ் வார்த்தைகளை வைத்து, இந்தப் பாடல் மூலம் ஒரு குட்டிக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இந்தப் பாடல் தனுஷ் நடித்த 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடலின் சாயலில் இருப்பதாகப் பலரும் சொல்லத் துவங்கி இருக்கும் நிலையில், தர்பார் படத்தில் ரஜினிக்காக அமைக்கப்பட்ட சும்மா கிழி பாடலைப் போன்றே, இதுவும் அப்பட்டமான காப்பி என்கின்றனர் இணையதளவாசிகள் பலரும்.

சும்மா கிழி பாடல் வெளியானபோதும், இதே போலவே ஐய்யப்பன் பாடலும், பிரஷாந்த் நடித்த தண்ணிக் குடம் எடுத்த பாடலின் பாடலின் ட்யூன்களும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக் கிளம்பி, பலரும் கிண்டல் செய்துவந்தனர்.

இந்த நிலையில் விஜய் பாடியிருக்கும் இந்த ஒரு குட்டி கதை பாடல், பக்தி படமான ராஜகாளி அம்மன் படத்தில் இடம் பெற்ற, ‛சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்... பாடலின் அதே ட்யூனில் இருப்பதாக கூறி, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.




Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கிண்டல் செய்தவருக்கு பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்கிண்டல் செய்தவருக்கு பதில் சொன்ன ... மன்னிப்பு கேட்டால் சேர்ப்போம்: ராதாரவி - முடியாது : சின்மயி மன்னிப்பு கேட்டால் சேர்ப்போம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17 பிப், 2020 - 10:47 Report Abuse
Yaro Oruvan ஜோசப்பு பட கதைதான் திருடுனதா இருக்கும்.. பாட்டு திருட மாட்டானுவ.. காபி அடிப்பானுவ.. திருட்டு வேற காப்பி வேற.. இது காப்பி ஜமீன் பிக் பாக்கெட் லெவல்.. கதை கொள்ளைக்காரனுங்க லெவல்.. இப்டி பண்றியே ஜோசப்பு
Rate this:
Babu Desikan - Bangalore,இந்தியா
16 பிப், 2020 - 11:13 Report Abuse
Babu Desikan எல்லாமே தற்செயலா நடந்துச்சோ
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
16 பிப், 2020 - 09:54 Report Abuse
Ram Sekar நான் ஏற்கனவே சொல்லிருக்கேன். இந்த பையன் எல்லாம் இசை அமைப்பாளர் அல்ல என்று. ஒரு லேப்டாப் கூட மியூசிக் மென்பொருள், ஒரு கி-போர்ட், ஒரு கிட்டார் மற்றும் ரெண்டு ஸ்பீக்கர் இருந்தால் போதும் யாரும் மியூசிக் அதான்பா இசை அமைப்பாளர் என்று சொல்லிக்கொள்ளலாம்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16 பிப், 2020 - 03:39 Report Abuse
meenakshisundaram ரெஹ்மான் பாட்டுக்களில் சில பிரபலமான ஹிந்து பக்தி பாடல்களின் சாயலைக் கொண்டிருக்குமே அதே போல தான் யாருமே royalty கேட்க முடியாதே ?மேலும் இந்த இளம் Isai இயக்குனர் தனது தலையில் குருவி தலையில் பனங்காய் என்பது போல இசை பணியை சுமந்து நிற்கிறார்'பாட்டு' தானாக வா வரும்?
Rate this:
Senthamizhsudar - Chennai,இந்தியா
15 பிப், 2020 - 19:14 Report Abuse
Senthamizhsudar காப்பி அடித்து விளம்பரம் தேடும் தமிழ் சினிமா அழிக்கபடவேண்டும்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in