Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி செய்தது சரி: பி.சி.ஸ்ரீராம்

15 பிப், 2020 - 12:28 IST
எழுத்தின் அளவு:
PC-Sreeram-supports-Vijaysethupathi

நடிகர் விஜய், பிகில் படத் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். நிறுவனம், பைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோர் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதில், நெய்வேலியில் மாஸ்டர் பட சூட்டிங்கிலிருந்த நடிகர் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து, அவருடைய பனையூர் வீட்டில் வைத்தும் விசாரணை நடத்தினர். தொடர்ச்சியாக, மூன்று தரப்புக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர்.

இந்நிலையில், மத மாற்றக் கும்பல், வெளிநாட்டில் இருந்து பெரும் தொகையை வாங்கி, அதை சினிமாவில் முதலீடு செய்திருக்கின்றனர். கூடவே, நடிகர் விஜய், விஜய் ஆண்டனி, பிரபு சாலமன், சந்திரசேகர், விஜய் சேதுபதி உள்ளிட்ட சினிமாக்காரர்கள் பலரும் மத மாற்ற செயல்களில் ஈடுபட்டு, நிறைய சம்பாத்தியம் பண்ணுகின்றனர். அதன் பின்னணியில் தான் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கிறது என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதையடுத்து, அந்த செய்திக்கு நடிகர் விஜய் சேதுபதி, போங்கடா போய் வேற வேலைய பாருங்கடா என சமூக வலைதளம் மூலமாகவே காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பி.சி.ஸ்ரீராம், நடிகர் விஜய் சேதுபதியின் கருத்தை வரவேற்று பதிவிட்டிருக்கிறார். நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய் சேதுபதி என ஆதரித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஜெய் படத்தின் ஹிந்தி உரிமை ரூ.1.8 கோடிக்கு விற்பனைஜெய் படத்தின் ஹிந்தி உரிமை ரூ.1.8 ... சிம்ரன் - காதல் கடத்தும் வல்லமை வாய்ந்தவர்: பார்த்திபன் சிம்ரன் - காதல் கடத்தும் வல்லமை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

meenakshisundaram - bangalore,இந்தியா
18 பிப், 2020 - 05:32 Report Abuse
meenakshisundaram ஹலோ ஸ்ரீ ராம் -சேதுபதி சொன்னது சரியா இல்லே செஞ்சது சரியான்னு 'கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
Rate this:
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
17 பிப், 2020 - 19:39 Report Abuse
Rangiem N Annamalai சினிமா டு புகழ் டு பணம் டு தயாரிப்பாளர் டு கடன்காரர் டு மத மாற்றம் டு கடன் தள்ளுபடி .இதன் நடுவில் சர்ச் சிலுவை என எல்லாம் படத்தில் காட்ட வேண்டும் .ரசிகர்களை முடிந்த அளவு மதம் மாற்ற வேண்டும் .சாண்டோ சின்னப்ப தேவர் போல் ஒருத்தன் வரமாட்டாரா ?.அப்பப்போ பார்ப்போம் எங்கள் ஆட்டத்தை .
Rate this:
rmr - chennai,இந்தியா
17 பிப், 2020 - 07:55 Report Abuse
rmr இவர் சொல்லுறபடியே மக்கள் அனைவரும் அவர் அவர் வேலைகளை மட்டும் செய்து கொண்டு இருந்தாலே போதும் சினிமா எல்லாம் பாக்கவே வேண்டாம் அது நம்ம வேலை இல்லை , அதைதான் அவர் சொல்லறாரு அதை நாமும் கேட்போம்
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
17 பிப், 2020 - 03:04 Report Abuse
Venkatesh உண்மையை சொன்னால் எகத்தாளம், நீங்க என்னடா சொல்றது, சினிமாவில் வரும் பெயர்களும், வசனமும் அதை உறுதி செய்கிறது, ஊறு விளைவிக்கும் விஜய் சேதுபதி போன்றவனையும், அவனுக்கு ஆதரவாக பேசுபவர்களையும் உதாசீனப்படுத்துங்கள்
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
17 பிப், 2020 - 01:41 Report Abuse
Aarkay திரைப்பிரமுகர்கள் என்ன தங்களை எல்லாம் தெரிந்த மேதாவிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? உங்களைவிட எங்களுக்கு படிப்பும், அறிவும் அதிகம் உங்களுக்கு உங்கள் துறை சார்ந்த அறிவு மட்டுமே மிஞ்சிப்போனால், எதை, எதோடு மிக்ஸ் செய்தால் நன்றாயிருக்கும் என்பது தெரிந்திருக்கும். மக்களுக்கு நீங்கள் கருத்து கூறத்தேவையில்லை இனி திரைப்படங்களை பார்ப்பதை தவிர்ப்போம் இந்த எல்லாம் தெரிந்த மேதைகளின் சொகுசு வாழ்க்கைக்கு நம் உழைத்து சம்பாதித்த பணத்தை விரயமாக்குவதை தவிர்ப்போம் எந்த படமும் ஓடாமல் போனால், இவர்கள் திமிர் அடங்கும்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in