'வாரிசு' தயாரிப்பாளருக்குப் பிறந்த ஆண் வாரிசு | மோகன்லாலின் அலோன் படமும் ஓடிடி ரிலீஸ் தான் | நடிகர் பூ ராமு மறைவு ; மம்முட்டி நெகிழ்ச்சி பதிவு | சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிஜுமேனன் | ரேவதிக்கு விருது : கொண்டாடி மகிழ்ந்த தோழிகள் | பிரித்விராஜின் கடுவா தள்ளிப்போனதன் பின்னணி இதுதான் | பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் யஷ்? | சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண் | திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பம், பாலிவுட் சர்ச்சை | தடைகளைத் தாண்டி தயாராகப் போகும் 'இந்தியன் 2' |
கவண், வானம் கொட்டட்டும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மடோனா செபாஸ்டின். காதலர் தினத்தையொட்டி, அவர் காதலர் தினம் குறித்த தன்னுடைய அனுபவத்தை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி மூலம் கூறியிருக்கிறார்.
அந்த பேட்டியில், மடோனா கூறியிருப்பதாவது: என்னுடைய பள்ளிப் படிப்பின் போது வந்த ஒரு காதலர் தினத்தை இன்று வரை என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் நாளில், அன்றைய பழைய சம்பவத்தை நினைத்து சிரித்துக் கொள்வேன். என்னுடைய பள்ளி வகுப்புத் தோழன் ஒருவர், பக்கத்துக்கு வகுப்பு பெண் ஒருவரை காதலித்தார். காதல் எங்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் நேரில் சந்தித்து தங்களுடைய காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
இதனால், காதலர் தினத்தில் இருவரும் நேரில் சந்தித்து, தங்களுடைய காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், இருவரையும் சந்திக்க வைத்தோம். இருவரும் ஒருவித தயக்கம்; பதற்றத்துடன் சந்திக்க சம்மதம் தெரிவித்தனர். திட்டமிட்டபடியே, இருவரையும் குறிப்பிட்ட ஒட்டலுக்கு வரவழைத்தோம். இருவரும் அருகருகே அமர்த்தப்பட்டு, பேச வைக்கப்பட்டனர். ஆனால், இருவரும் வெகு நேரம் ஆகியும், ஒருவரை மற்றவர் காதலிக்கும் விஷயத்தை சொல்லவே இல்லை. என்ன சாப்பிட்டாய்? என்ன படம் பார்த்தாய்? என்று ஏதேதோ பேசியபடியே நேரத்தைப் போக்கினர். கடைசி வரை காதலை சொல்லவே இல்லை. இதனால் வெறுத்துப் போய் கிளம்பி வந்து விட்டோம். ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினத்தன்று இந்த சம்பவம் என் மனதில் வந்து போகும் என்றார்.