ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் | கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! |
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா ஆகியோர் நடிப்பிலும், பிரேம் குமார் இயக்கத்திலும் வெளியான 96 படம் பெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் இதன் தெலுங்கு ரீ-மேக் ஜானு என்ற பெயரில் வெளியானது. ஆனால் அங்கு எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதற்கிடையே இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பிரேம் குமாரை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பிரேம் குமார் வீட்டுக்குச் சென்று, அவரை சந்தித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அப்போது, பிரேம் குமார் வீட்டில் மதிய உணவும் சாப்பிட்டிருக்கிறார். பின், பிரேம் வீட்டில் இருந்த த்ரிஷா என்ற பூனை உடன் போஸ் கொடுத்து, போட்டோ எடுத்துக் கொண்டார் விஜய் சேதுபதி.
அந்தப் போட்டோவை இயக்குநர் பிரேம்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, த்ரிஷா-விஜய்சேதுபதி- 96 மூவி எனவும் குறிப்பிட்டு விட, அதை வைத்து, திரைக்கதை எழுதத் துவங்கி விட்டனர் ரசிகர்கள். 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான கதை டிஷ்கஷனுக்காகத்தான், நடிகர் விஜய் சேதுபதி உங்கள் வீட்டுக்கு வந்தாரா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு, பிரேமை துளைத்தெடுக்கின்றனர்.