Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுடன் திருமணமா? - சுபிக்ஷா பரபரப்பு!

14 பிப், 2020 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Subhiksha-about-wedding-rumour-with-Simbu

சென்னை: நடிகர் சிம்புவுடன் திருமணம் நடக்க உள்ளதாக வெளியான தகவலை, நடிகை சுபிக்ஷா மறுத்துள்ளார்.

சிம்புவுக்கு பெண் பார்க்கும் வேலைகளில், அவரது பெற்றோர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சிம்புவின் எல்லா பிரச்னைகளுக்கும், திருமணம் தான் நல்ல தீர்வாக அமையும் என, அவர்கள் நம்புகின்றனர். அதனால், அவரது ஜாதகத்திற்கு ஏற்ற பெண்ணை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிம்புவுக்கும், ‛அன்னக்கொடி' படம் வாயிலாக, தமிழில் அறிமுகமான நடிகை சுபிக்ஷாவுக்கும் திருமணபேச்சு நடப்பதாக, சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. சமீபநாட்களாக, சிம்பு பங்கேற்ற விருந்துகளில், சுபிக்ஷாவும் ஆஜரானார்.

இது குறித்து, சுபிக்ஷா அளித்த பேட்டி: சிம்பு மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. அவர், நண்பர்களுக்கு மரியாதை அளிப்பவர். தொழில் ரீதியாக, நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம். எங்கள் இருவருக்கும் திருமண பேச்சு நடக்கிறது என்பதில் உண்மையில்லை. சமீபத்தில், சிம்பு உடன் ஒன்றிரண்டு விருந்தில் பங்கேற்றேன்; அதை வைத்து, தவறாக சித்தரிக்கின்றனர். நாங்கள் தொழில் ரீதியாக, இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில், சிம்பு படத்தில் நடிப்பேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛நெற்றிக்கண்' ரீமேக் - என் அனுமதி பெற வேண்டும்: விசு‛நெற்றிக்கண்' ரீமேக் - என் அனுமதி ... ரஜினி - விஜய்சேதுபதி பட வாய்ப்பு : மஞ்சு வாரியர் சொல்வது என்ன ரஜினி - விஜய்சேதுபதி பட வாய்ப்பு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
15 பிப், 2020 - 17:41 Report Abuse
 Muruga Vel தொழில் ரீதியாக, நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம். நாங்கள் தொழில் ரீதியாக, இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது....நடிகைகள் பொதுவா தொழிலதிபரை தானே திருமணம் பண்ணுவாங்க ...இவுங்க எந்த தொழில் பத்தி சொல்றாங்க ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in