Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛நெற்றிக்கண்' ரீமேக் - என் அனுமதி பெற வேண்டும்: விசு

14 பிப், 2020 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Visu-about-Netrikan-remake

அப்பா - மகன் என ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடித்த படம் ‛நெற்றிக்கண்'. கவிதாலயா தயாரித்த இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். ரஜினியுடன் லட்சுமி, மேனகா, சரிதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். அப்பா ரஜினி பெண் பித்தராக நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும், ரஜினி நடித்த கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், மேனகா நடித்த கேரக்டரில் அவரது மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

நெற்றிக்கண் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியது விசு. ரீமேக் குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பல படங்களை நான் மதிக்கும் கே.பாலச்சந்திரின் மகள் புஷ்பா கந்தசாமி, என் அனுமதி இன்றி பலருக்கு விற்றுள்ளார். நெகட்டிவ் உரிமம் அவர்களிடம் இருந்தாலும் படங்களின் கதை என்னுடையது. எனவே அதை விற்கும்போது எனக்கு பணம் தராவிட்டாலும் குறைந்தபட்சம் அனுமதியாவது பெற்று இருக்கிறேன். தில்லுமுல்லு படத்தின் கதையை விற்றதை எதிர்த்து வழக்கும் தொடர்ந்திருக்கிறேன்.

சம்சாரம் அது மின்சாரம் படத்தின் உரிமத்தை ஏவிஎம் சரவணன் பல மொழிக்கு விற்றபோது எனக்கும் பணம் கொடுத்தார். வீடு மனைவி மக்கள் படத்தில் நான் நடிக்க மட்டுமே செய்தேன். அந்த படத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனாலும் தயாரிப்பாளர் ராம நாராயணன் எனக்கு பணம் கொடுத்தார். ஆனால் அந்த நாகரீகம் புஷ்பா கந்தசாமிக்கு தெரியவில்லை.

தற்போது நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய இருப்பதாக அறிகிறேன். அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவன் என்ற முறையில் என்னிடம் அனுமதி பெறாமல் தனுஷ் ரீமேக் செய்யக்கூடாது. அந்தப் படத்திற்கு நானும், எஸ்.பி.முத்துராமனும் எவ்வளவு உழைத்தோம் என்பதை தனுஷ் அவரது மாமனாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு விசு கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
கன்னடத்தில் கால்பதிக்கும் விஜய் மில்டன்கன்னடத்தில் கால்பதிக்கும் விஜய் ... சிம்புவுடன் திருமணமா? - சுபிக்ஷா பரபரப்பு! சிம்புவுடன் திருமணமா? - சுபிக்ஷா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

kalyan - Tiruchirapalli,இந்தியா
20 பிப், 2020 - 09:15 Report Abuse
kalyan Thillumullu kathaiye Gol Maal ra Hindi Patakkathsi than ithill Royalty veera ?
Rate this:
Mango Mani - Bangalore,இந்தியா
17 பிப், 2020 - 00:47 Report Abuse
Mango Mani அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள்...
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
16 பிப், 2020 - 22:15 Report Abuse
Bhaskaran சினிமா தயாரிப்பாளர்களிடம் கதையை விற்றுவிட்டபின் உரிமை கேட்கலாமா
Rate this:
kuzhpavan - toronto,கனடா
16 பிப், 2020 - 09:01 Report Abuse
kuzhpavan Virakthiyil veena poona visu ..manasatchi kekatum ethanai kathaigal avar sottathu ru..vaysagivita visu..iila visham
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16 பிப், 2020 - 08:15 Report Abuse
skv srinivasankrishnaveni ப்ளீஸ் வேண்டாமே அந்தக்கதை இப்போது பார்த்தாலும் மனத்துளே ஒருமாதிரி சிலிர்ப்பு வரும் அப்பாவுடைய கேனக்கிறுக்குத்தனம் தான் இதுலே மெயின் அதை பிள்ளை எப்படி சரிசெய்யறான் என்பது தீம் (பல தந்தைகள் திருந்தியதுமில்லே அதுவும் உண்மை என்று ரீ மேக் செய்றானோ மறுமவன்
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in