Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஸ்கர் வென்ற படம் மீது வழக்கு!

14 பிப், 2020 - 01:09 IST
எழுத்தின் அளவு:
Case-over-Oscar-winning-film!

இம்முறை, பாராசைட் என்ற கொரிய படம், சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இப்படம், 1999ல், தேனப்பன் தயாரிக்க, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், விஜய், ரம்பா உள்ளிட்டோர் நடித்த, மின்சார கண்ணா படத்தின் அப்பட்டமான காப்பி என, சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


இதுதொடர்பாக, பாராசைட் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடருவீர்களா? என, கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டபோது,மின்சார கண்ணா படக் குழுவினருக்கே, ஆஸ்கர் கிடைத்தது போல் மகிழ்கிறேன். படத்தின் உரிமை, தேனப்பனிடம் உள்ளது. அவர் தான், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும், என்றார்.


வெளிநாடு தொடர்புடைய விவகாரம் என்பதால், அதற்கான வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். இதுகுறித்து, விரைவில் அறிவிப்பேன், என, தேனப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
பொம்மைகள் ஜாக்கிரதை!பொம்மைகள் ஜாக்கிரதை! கறுப்பு ஆடையில் புரோமோஷன்! கறுப்பு ஆடையில் புரோமோஷன்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

இரா. சந்திரன் - சென்னை,இந்தியா
15 பிப், 2020 - 12:16 Report Abuse
இரா. சந்திரன் அவ்வை ஷண்முகி (Mrs. Doubtfire) மற்றும் தெனாலி (What about Bob) படங்களை ஹாலிவுட்டில் இருந்து காப்பியடித்த ரவிக்குமாரை என்ன செய்யலாம்..?
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15 பிப், 2020 - 07:54 Report Abuse
ஆரூர் ரங் ஆஸ்கருக்கு வந்த சோதனை மட்டமான விஜய் படத்தையும்கூட காப்பியடித்தவனுக்கு அவார்ட் கொடுக்குது
Rate this:
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
15 பிப், 2020 - 06:26 Report Abuse
Rangiem N Annamalai எல்லா நாட்டு நீதி மன்றங்களும் தமிழ் சினிமாவில் உள்ள அனைவர் மேல் வழக்கு பதிவு செய்வார்கள் . காப்பியடிப்பது தான் தமிழ் முன்னணி இயக்குனர்கள் வேலை .இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தமிழ் படத்தில் இருந்த காப்பி அடிப்பது தான் .
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
15 பிப், 2020 - 05:48 Report Abuse
Indhuindian அந்த நாட்களில் மிகவும் பிரபலமான இயக்குனர்கள் எல்லாம் அவர்களுடைய படத்துக்கு பாலிவுடையே காபி அடித்தனர்- Sound of Music, Witness for the Prosecution etc., இவையெல்லாம் காபி அடித்து எடுக்கப்பட்ட படங்கள் ஓஹோ வென்று ஓடியது பல அவார்டுகளையும் வாங்கியது. பாலிவுட் இல்லை என்றால் கோலிவுட் காலிவூட் ஆகிவிடும்
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
14 பிப், 2020 - 17:40 Report Abuse
கல்யாணராமன் சு. இயக்குனர் ரவிகுமாருக்கும், தயாரிப்பாளர் தேனப்பனுக்கும் காப்புரிமை சட்டங்கள் தெரிந்திருக்கும் என நம்புவோம் ........... substantial similarity என்று வைத்து பார்க்கும்போது இவர்களின் வாதம் தோற்றுவிடும் ........... மின்சாரக்கண்ணா படத்தில் பணக்கார பையன் பணக்கார காதலி வீட்டில் வேலை செய்வதாக இருக்கிறது ........... கொரியன் படமும் அப்படித்தானா? .............. இதைத் தவிர காட்சிகளை ஒவ்வொன்றாக கூர்மையாக கவனித்து ...... அவைகளில் அதிகமாக ஒற்றுமையை கண்டால்தான் இவர்களுடைய வழக்கு வெற்றிபெறும் ........ ஒன்று இரண்டு காட்சிகளை வைத்து ஜெயிப்பது கடினம் ............இப்படியெல்லாம் பார்க்க ஆரம்பித்து விட்டால், கஜினி போன்ற படங்களுக்கு பெரும் சிக்கல் வரும் ....... அது memento என்ற படத்தின் காப்பி என்று சொல்லி வழக்கு போடும் நிலைமை வரும் ...... ரவிகுமாருடைய படங்களுக்கே சிக்கல் வரும் ....... அவருடைய தசாவதாரம் படத்தின் "கல்லை மட்டும் கண்டால் ....." பாடல் 1994 ல் வந்த மலையாள படப்பாட்டின் அட்டை காப்பி .......
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in