Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முருகதாஸின் சம்பளம் தான் தர்பார் நட்டத்திற்கு காரணம் ; இயக்குனர் கேயார் விளாசல்

13 பிப், 2020 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Producer-keyaar-about-Darbar-Loss

கடந்த சில நாட்களாகவே தர்பார் படம் நஷ்டம் என்று கூறிக் கொண்டு சில விநியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று ரஜினிகாந்த் வீட்டையும், ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகத்தையும் முற்றுகையிட முயற்சித்தனர். இந்த நகழ்வு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவருமான கேயார், தர்பார் பட நஷ்ட ஈடு விவகாரம் பற்றி கூறும்போது, முருகதாஸின் அதிகப்படியான சம்பளம் தான் தர்பார் படம் நஷ்டம் ஆனதற்கு காரணம் என கூறி அதிர வைத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “சமீபத்தில் வெளியான தர்பார் படத்திற்கு ஏ.ஆர்.முருகதாசுக்கு சம்பளமாக 33 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்றைக்கு திறமை மிகுந்த இயக்குனர்கள் எவ்வளவு பேர் நல்ல கதைகளுடன் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். முருகதாஸுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் ஒரு சதவீதம் அதாவது வெறும் 30 லட்சம் மட்டுமே ஒரு அறிமுக இயக்குனருக்கு கொடுத்து இருந்தால் அவரை விட இன்னும் சிறப்பாக இந்த படத்தை இயக்கி இருப்பார்.

இந்த படத்தை பார்க்கும்போது ரஜினி தான் மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து சென்றிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அந்தவகையில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் தான் இந்த படத்தின் நஷ்டத்திற்கு காரணம்.

இதுபோன்ற வெளியாகும் பெரிய படங்கள் ரிலீசுக்கு முன்பாகவே கிட்டத்தட்ட 30 லிருந்து 40 கோடி ரூபாய் வரை நட்டத்தை சந்திக்கின்றன. லைகா நிறுவனம் முருகதாஸை இந்தப்படத்திற்கு இயக்குனராக கொண்டு வந்தது இந்த படத்தில் நட்டத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. அவர் ஒரு நல்ல தரமான கருவுடன் இந்தப்படத்தை உருவாக்கவில்லை. அதுமட்டுமல்ல தர்பார் படம் முருகதாஸின் பெயர் சொல்லும் படமாகவும் இல்லை. அவர் சிறந்த இயக்குனர் தான்.. நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார் தான்.. ஆனால் ஸ்பைடர் படத்தை தொடர்ந்து சமீப காலங்களில் அவரது டைரக்சன் இறங்குமுகத்தில் இருக்கிறது” என்றும் கேயார் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனராகிறார் விவேக்இயக்குனராகிறார் விவேக் லுங்கி உடன் புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா லுங்கி உடன் புரமோசன் நிகழ்ச்சியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

rishi - varanasi,இந்தியா
23 பிப், 2020 - 15:58 Report Abuse
rishi முருகதாஸ் ஒரு கதை திருடன் திருடப்பட்ட கதையில் இவன் பொழப்பு ஓடுது.. ரஜினி இவனுக்கு வாய்ப்பு கொடுத்தது சர்க்கார் படத்தில் சிகரெட் காட்சிக்கு எதிப்பு தெரிவித்த அன்புமணி ராமதாஸை முருகதாஸ் எதிர்த்ததால், ரஜினிக்கு பழைய பகை இன்றும் மனதில் இருக்கிறது.
Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
19 பிப், 2020 - 19:50 Report Abuse
தமிழர்நீதி ரஜினிக்கு ராகு காலம் . எதைத்தொட்டாலும் தோல்வி . அதனால் நல்லவர்கள் பேர் கெட்டுப்போகிறது . கிழடுகள் போய் ஓய்வெடுக்காமல் ,பாவம் திரை துறையை நட்டத்தில் கொண்டு விட்டுவிடுகிறது .
Rate this:
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
18 பிப், 2020 - 22:03 Report Abuse
நந்தினி திவ்ய பாரதி மோக்கா சினிமா காம்பிச்சா டிக்கெட் டொலர் ரூவா திருப்பீ குடுக்கோணும். எங்களூக்கு கொடுக்கோணும்
Rate this:
Kannan Kumarasamy - Al Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
15 பிப், 2020 - 12:32 Report Abuse
Kannan Kumarasamy ரஜினி க்கு கொடுத்த 1௦௦ கோடி கண்ணுக்கு தெரியலையா இந்த நடிகர் எல்லாம் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறானுங்க.
Rate this:
Tamil - chennai,இந்தியா
15 பிப், 2020 - 10:03 Report Abuse
Tamil கிழவனுக்கு மேக் up போட்டt குமரன் ஆயிடுவானா ? கிழவனுக்கு மேக் up கோட் சூட்டுக்கு செலவு முருகதாசு சம்பளத்தோடு ஜாஸ்தியா இருக்கும். கிழவனை வச்சு படம் எடுத்த இவளவு தான் எடுக்கமுடியும். 100 கோடி வாங்கினவனா விட்டுவிட்டு 30 கோடி வாங்கினவரா குறை சொல்லுறன் மடையன். வந்தேறி கிழவனிட்ட போய் கேளு உனக்கு இந்த வயசில ஹீரோயினே நயந்தாரா வேணுமான்னு ??? அடுத்த படத்தில நயன்தாரா கீர்த்த்திசுரேஷ் வேற சந்தானம் காமெடி தான் ஞாபகம் வருது. கிழவனை வச்சு படம் எடுத்தத்தால நஷ்டம் ஆச்சுன்னு கேட்டதுக்கு தான் பைனான்சியர் வீட்டுல ரெய்டு விட சொல்லிருக்கான் கிழவன் 5 பைசா வாங்கமுடியாது படத்தில நடிக்கும்போது மட்டும் கோடி கோடி செலவு செய்கிற மாதிரி நடிப்பான் நிஜத்தில் வடி கட்டிய கஞ்சன்.
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in