'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
விஜய் நடித்து வெளிவந்த 'பிகில்' படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. ஆனால் வருமான வரித்துறைக்கு திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் சரியாக கணக்கு காட்டவில்லை என்ற புகார் எழுந்தது. இதை தொடர்ந்து,ஏஜிஎஸ்., நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் விஜய் ஆகியோரின் வீடு, அலுவலங்கள் உட்பட 38 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடுகளில் இருந்து, கணக்கில் வராத 77 கோடி ரொக்கம், பல ஆவணங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்க்கு ஏஜிஎஸ் திரைப்பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி, திரைப்படத்தை விநியோக உரிமம் பெற்ற 'ஸ்கிரீன் கிரீன்' உரிமையாளர் சுந்தர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் அன்புச்செழியன், விஜய் சார்பில் அவரது ஆடிட்டர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி நேற்று தனது ஆடிட்டர்களுடன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் பிகில் படத்தின் வரவு, செலவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தன் தரப்பு ஆவணங்களை அவர் வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தார்.