ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா? | பில்கேட்சை சந்தித்த மகேஷ்பாபு | இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை | பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ் | அம்மன் தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு? | ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள் | மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர் ஹேமா - என்ன ஆச்சு? | ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய சிபு சூரியன் | ஓடிடி ரிலீஸ் : தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு | 'பொன்னியின் செல்வன்' பின்னணி இசையில் டிரம்ஸ் சிவமணி |
பிரபல இந்தி நடிகை கல்கி கோச்சலின் தேவ் டி. இவர் பல இந்திப் படங்களீல் நடித்து முடித்து, சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியான நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இந்நிலையில், அவர், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹெர்ஸ்பெர்க் என்பவரை காதலித்ததாகவும், அவருடன் இணைந்து, கர்ப்பமாகி இருப்பதாகவும், கடந்த அக்டோபரில் அறிவித்து, கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
கடந்த இரு நாட்களுக்கு முன், அவர் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை, புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறார். திருமணம் ஆகாமலேயே கல்கி கோச்சலின் குழந்தை பெற்று இருக்கும் நிலையில், அவருக்கு இந்தி பட உலகில் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன.
கல்கி, கடந்த 2011ல் நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால், 2015ல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.