Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தோல்வியை நோக்கி 'ஜானு'

11 பிப், 2020 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Jaanu-may-be-flop

2018ம் ஆண்டின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாக அமைந்த படம் விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த '96'. அந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து அனைவரும் கொண்டாடும் படமாக அமைந்தது. தமிழ் சினிமா வரலாற்றில் அந்தப் படத்திற்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது.

அப்படிப்பட்ட படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து 'ஜானு' என்ற பெயரில் கடந்த வாரம் வெளியிட்டார்கள். நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லையாம். இதுவரை சுமார் 7 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். படத்தின் வியாபாரம் மட்டும் 21 கோடி வரை நடந்துள்ளது. இன்னும் 14 கோடி வசூலித்தால் தான் படத்தின் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள்.

இப்படத்திற்காக எந்த பேட்டியையும் படத்தின் நாயகன் சர்வானந்த் கொடுக்கவில்லை. எப்படியும் தன்னுடைய நடிப்பை விஜய் சேதுபதியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். எதற்கு வம்பு என அவர் பேட்டிகளைத் தவிர்த்தாராம். அவர் எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் சமந்தா கூட த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தார். ஆனாலும், அவரை சம்மதிக்க வைத்தார்கள். இப்போது சமந்தாவுக்கும் சிக்கலாகிவிட்டது. தெலுங்கு ரசிகர்கள் '96' படத்துடன் 'ஜானு' படத்தை ஒப்பிட்டதன் விளைவுதான் படத்தின் ரிசல்ட் இப்படியாகிவிட்டது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கும் தண்ணீர் பாதுகாப்பு பாடல்ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கும் தண்ணீர் ... மூன்று மொழிகளில் வெளியாகிறது ‛காடன்' மூன்று மொழிகளில் வெளியாகிறது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

S Ramkumar - Tiruvarur,இந்தியா
13 பிப், 2020 - 10:34 Report Abuse
S Ramkumar தெலுங்கு காரங்கள் சரியான தீர்ப்பை தான் சொல்லி உள்ளார்கள். அடுத்தவன் பொண்டாட்டி முன்னாள் காதலனுடன் ரூமில் உட்கார்ந்து ஆழுது கொண்டு இருக்கும் கயவளித்தனமான படத்தை தோற்கடித்து சரியான தீர்ப்பை சொல்லி உள்ளார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in