யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வெள்ளி விழா படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர். கடைசியாக 2007ம் ஆண்டு வீராசாமி படத்தை இயக்கினார். அதன் பிறகு கிராமத்து காதலை மையமாக கொண்டு ஒரு தலை காதல் என்ற படத்தை ஆரம்பித்தார். இதில் டி.ராஜேந்தர் ஜோடியாக மும்தாஜ் நடித்தார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த நிலையில் படத்தை கைவிட்டு விட்டார்.
தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். படத்திற்கு தலைப்பு இன்னிசை காதலன். இது ஒரு இசை கலைஞனுக்கும், ஒரு மாடல் அழகிக்குமான காதலை சொல்லும் படம். இதில் இசை கலைஞனாக டி.ராஜேந்தர் நடிக்கிறார். மாடல் அழகியாக நமீதா நடிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் தவிர மேலும் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இது தவிர பல புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார்.
படத்திற்காக சென்னை, போரூரில் உள்ள அவரது கார்டனில் அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. படத்தில் 9 பாடல்கள் இடம் பெறுகிறது. அந்த பாடல் காட்சிகளை முதலில் படமாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தை அவரது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.