ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
சந்தானம் நடித்த 'டகால்டி, சர்வர் சுந்தரம்' ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 31ம் தேதியன்று வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டன. ஆனால், சந்தானம் அவரே தயாரித்த 'டகால்டி' படம் மட்டுமே அன்றைய தினம் வெளியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், சிலரை அணுகி, 'சர்வர் சுந்தரம்' படத்தை இரண்டு வாரங்கள் கழித்து வெளியிட வைக்க நிர்ப்பந்தம் செய்தார். அதன்பின் 'சர்வர் சுந்தரம்' படத்தை பிப்ரவரி 14ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தார்கள்.
சந்தானம் பெரிதும் எதிர்பார்த்த 'டகால்டி' படம் அவரை ஏமாற்றியது. அந்தப்படம் வெளிவரும் வரை 'சர்வர் சுந்தரம்' படத்தை கண்டு கொள்ளாமலே இருந்தார் சந்தானம். இப்போது 'டகால்டி' சரியாக ஓடாததால் அடுத்து 'சர்வர் சுந்தரம்' படத்தை நம்பியுள்ளார். அதனால், கடந்த சில நாட்களாக 'சர்வர் சுந்தரம்' படத்தை தன்னுடைய டுவிட்டரில் பிரமோஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார். எப்படியோ, சில பல தாமதத்திற்குப் பின் வரும் 'சர்வர் சுந்தரம்' தயாரிப்பாளரை மகிழ்வித்தால் சரி.