நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் நாற்பதாவது படம் உருவாகி வந்தது. இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜ் கூறியிருப்பதாவது:
தனுஷ் நடிப்பில் உருவாகும் இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை தெரிந்து, அதற்கேற்ப, படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். பெரிய மீசை, கிராமத்து வேடம் என படம் முழுக்க, நடிகர் தனுஷ் கலக்கி இருக்கிறார். இந்தப் படமும், அவருடைய ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் மதுரையில் நடந்து முடிந்திருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19ல் வெளியிடப்படும் என்றார்.