நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ‛கோடீஸ்வரி'. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் கவுசல்யா, ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது திரைப்பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர். இப்போது நடிகை மீனா பங்கேற்றுள்ளார். போட்டியில் அவர் ரூ.3.20 லட்சம் வென்றுள்ளார்.
நிகழ்ச்சியின் போது தனது குழந்தை பருவம் தொடங்கி இப்போது வரை பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனது மகள் நைனிகா தன்னைப் போலவே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானது தொடங்கி, தனது குழந்தைப் பருவத்தை மற்ற குழந்தைகளைப் போல் கழிக்காமல் தவற விட்டுவிட்டதாகவும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மீனா தெரிவித்தார்.
ரஜினியை அங்கிள் என அழைத்தது முதல் பின்னாளில் அவரை அத்தான் என கூறியது வரை சினிமாவில் தனது நீண்ட பயணத்தையும், தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆனது பற்றியும், ரஜினி உடன் 168 படத்தில் நடிக்கும் அனுபவங்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி நாளை(பிப்.,11) கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பாகிறது.